மத்திய பட்ஜெட் உரையை துவங்கினார் சிதம்பரம்மத்திய பட்ஜெட் உரையை துவங்கினார் சிதம்பரம் ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு ...
2013-2014ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2013
11:50

புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், *தாழ்த்தப்பட்டோர் நலன் மேம்பாட்டிற்காக ரூ.41,561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * இளைஞர் வேலைவாய்ப்பை அதிகரிக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * குழந்தைகள் நலனுக்காக ரூ.97,134 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * பழங்குடியினர் நலனுக்காக ரூ.24,598 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * பெண்கள் நலனுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * மாற்று திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது * மருத்துவ துறை வளர்ச்சிக்காக ரூ.4722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக ரூ.37,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * கல்விக்கு ரூ.65,687 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. * மதிய உணவு திட்டத்திற்காக ரூ.13,215 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * சித்தா மருத்துவமத்திற்காக ரூ.1069 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. *கல்விக்கு 65, 867 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்காலர்ஷிப்புக்கு ரூ .5, 284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. *வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு * வேளாண்துறைக்கு ரூ. 27,000 ‌கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.15,260 கோடியும், ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.80,197 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பிற்கு ரூ.15,260 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * விவசாய கடன் இலக்கு ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. * ஊரக வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * தேசிய புனரமைப்பு திட்டத்திற்காக ரூ.14,873 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * விவசாய மேம்பாட்டிற்காக ரூ.27,049 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * புதுடில்லி : மனிதவள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.65,897 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * விவசாய துறை ஆய்விற்கு ரூ.3450 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ரூ.43,536 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்காக 80 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. *தென்னை சாகுபடியை கேரளா முழுவதும் விரிவுபடுத்த ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது * மதிய உணவு திட்டத்திற்காக ரூ.13215 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஊட்டச்சத்து பயிர்சாகுபடி முன்னேற்ற திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * விவசாயத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. .* சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்க ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * தனிநபருக்கான வீட்டு கடன் குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாகவும், அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை அதிகரிக்கப்படும். * பெண்களுக்கான தனி வங்கிகள் துவக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படு்ம். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏடிஎம் வசதி. * 10ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் எல்.ஐ.சி. அலுவலகங்கள் திறக்கப்படும். அனைவருக்கும் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் * ராணுவத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஊரக வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ. 6,000 கோடியும், புற நகர் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ. 2,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை. நேரடி வரிகளிலும் மாற்றமில்லை * ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி. * கல்விக்கான வரி விதிப்பு தொடரும் . * பங்குப் பரிவர்த்தனை வரி குறைக்கப்படும். கலால் சுங்க வரியில் மாற்றமில்லை. * சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உ‌யர்த்தப்பட்டுள்ளது. * விசைத்தறி மேம்பாட்டிற்கு ரூ.2400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஊரக வீட்டு வசதி துறை மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * ஊரக வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.3300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும். * கால்நடை வளர்ச்சிக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கான சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும். 800 சிசி க்கு மேல் திறன் கொண்ட மோட்டார் பைக்கிற்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும். * ரூ.2000 க்கும் மேல் விலை உள்ள மொபைல்களுக்கு 6 சதவீதம் வரி விதிக்கப்படும். * குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வரி விதிக்கப்படும்;நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.13,300 கோடியும், மறைமுக வரி விதிப்பு மூலம் ரூ.4700 கோடியும் வருவாய் கிடைக்கும்.
* திரைப்பட துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்; கப்பல் கட்டும் தொழில்களுக்கு உற்பத்தி வரி விலக்கு அளிக்கப்படும். எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)