நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எப்போதும் இருக்கும் "பளபள'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
14:19

சாலையில், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் காரை பார்க்கும் போதெல்லாம், நமக்கும் தாரை, தாரையாக ஆசை வருவதில் தவறில்லை. கடன் வாங்கியாவது கார் வாங்கி, ஓட்டும் போது கிடைக்கும் பரவசத்துக்கு அளவே இல்லை. இப்பரவசம், நாளாக, நாளாக கொஞ்சம் தேய்வது வாடிக்கை. ஆனால், முறையாக காரை பராமரித்தால், எப்பொழுதும் உற்சாகம் குறையாமல் இருக்கும். இதற்கு கொஞ்சம் நேரமும், பணமும் ஒதுக்கினால் போதும். அதற்கு சில டிப்ஸ் இதோ...!
முறையான பராமரிப்பு
கார் உரிமையாளர், முதலில் "ஓனர்ஸ் மேனுவல்' புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். அதில், கார் பராமரிப்பு குறித்து அனைத்து தகவல்கள் நிறைந்துள்ளன. இதன்படி, முறையாக பராமரித்தால் போதும். முதல் சர்வீசை தவற விடக்கூடாது. சர்வீசுக்கு உண்டான கிலோ மீட்டர் மற்றும் நேரம் நெருங்கியதும், சர்வீஸ் சென்டரை உடனடியாக அணுகுவது நல்லது. 5,000 கி.மீ., இயங்கிய பின், சக்கரத்தை மாற்றினால் ஆயுட்காலம் அதிகரிக்கும்.
வாட்டர் சர்வீஸ்: உப்பு நீரில் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சி கழுவாமல், ஈரத்துணியில் துடைத்து எடுக்கவும். பயன்படாமல் வெகுநாட்கள் நிற்கும் காரை, வாட்டர் சர்வீஸ் பண்ணக்கூடாது. வண்டியை சிறிது நேரம் ஓட்டிய பின்பே கழுவலாம். வாட்டர் சர்வீஸ் முடிந்தவுடன், சிறிது தூரம், பிரேக் போட்டு வண்டியை ஓட்டவும்.
பேட்டரி ஆயுள்: அதிகளவில் ஓட்டம் உள்ள காரை விட, அதிக நாட்கள் நிற்கும் காரின் பேட்டரியே பலவீனம் அடைகிறது. அதனால், நிறுத்தி வைக்காமல் அவ்வப்போது காரை இயக்குவது அவசியம்.
கார் ஸ்டாண்ட்: வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிட, ஒரு வருடத்திக்கு மேல் பிடிக்குமெனில், காரை ஸ்டாண்டில் நிறுத்த வேண்டும். இத்தகைய ஸ்டாண்டுகள் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. அதை வாங்கி, அதன் மேல் நிறுத்தினால், வீல் பேரிங் மற்றும் ஷேக்கஸ்பர் பலவீனம் அடையாமல் இருக்கும்.
வெயிலில் கவனம்: காரை வெயிலில் நிறுத்தும் போது, கொஞ்சம் இடைவெளி விட்டு கண்ணாடியை மூடவும். ஈரப்பதம் இல்லாத, சுத்தமான இடத்தில் நிறுத்த வேண்டும். நிறுத்தும் இடத்தில் ஆயில் மற்றும் நீர்க்கசிவு உள்ளதா, என பார்க்க வேண்டும். திறந்தவெளியில் பாடிகவர் போட்டு, மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கக் கூடாது. ஏனெனில், காரோடு கவர் ஒட்டினால், பெயின்டை உரிந்து விடும். இதனால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை, கவரை அப்புறப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம். பிளேயரில் இருந்து
"டிவிடி' மற்றும் "சிடி'யை வெளியே எடுப்பது நல்லது. இல்லையெனில், "சிடி' வளைந்து, பிளேயர் பலவீனம் அடைய வாய்ப்புண்டு. மேலும், வெயிலில் நிற்கும்போது, டேஸ்போர்டு மேல், வெள்ளைநிற துணியால் மூடுவது நல்லது. முன்புறக் கண்ணாடியில் சன் ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம்.
நிறுத்தும் போது: நிறுத்தும் போது ஹேண்ட் பிரேக் போட்டு, கியரில் நிறுத்தவும். மேட்டுப்பாங்கான பகுதியில் நிறுத்தும் போது, ஹேண்ட் பிரேக் போட்டு, முதல் கியரில் நிறுத்தவும். பள்ளத்தை நோக்கி நிறுத்தும் போது, ஹேண்ட் பிரேக் போட்டு, ரிவர்ஸ் கியரில் நிறுத்த வேண்டும்.

தொலைதூர பயணம்: சர்வீஸ் முடிந்து மூன்று நாட்கள், நம் வட்டாரத்தில் பயன்படுத்தி, தொலைதூரப் பயணத்துக்கு பயன்படுத்தலாம். இதில் 60 முதல் 70 கி.மீ., வேகத்தில் சென்றால், அதிக மைலேஜ் கிடைக்கும். தொலைதூரப் பயணமெனில், "ஏசி' மற்றும் "நான் ஏசி' என இரண்டில் ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். மாறி, மாறி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏசி பயன்பாடு: ஏசி வசதியுள்ள காரை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஷீட்கவர், மேட், காரின் அடிப்பகுதிகளை தூய்மையாக வைக்கவும். காரின் உட்பகுதி சுத்தமாக இருக்கும் எனில், குளிர்ச்சி அதிகம் கிடைக்கும். வெகுநாட்கள் நிறுத்தப்பட்டிக்கும் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன், "ஏசி'யை போடக்கூடாது. கண்ணாடிகளை நன்கு திறந்து விட்டு, ஒருகிலோ மீட்டர் ஓட்டிய பின் பயன்படுத்தலாம். அதேபோன்று, நிறுத்தப்பட்டிருக்கும் காரில், இன்ஜினை இயக்க விட்டு, ஏசி போட்டு வெகுநேரம் உட்காரக் கூடாது.
தீ விபத்து: வீட்டு சிலிண்டர்களை கார்களுக்கு பயன்படுத்த கூடாது. இதில், எரியும் அழுத்தம் அதிகமென்பதால், காரின் இன்ஜின் ஆயுள் குறைக்கும். காரின் தன்மைக்கு புறம்பாக, காஸ் மறுசீரமைப்பில் ஈடுபடக்கூடாது. காரின் எலக்ட்ரிக்கல் ஒயரிங்குகளை, சரியாக பராமரிக்க வேண்டும். இதில், குளறுபடி இருந்தால் தீப்பற்றி எரிய வாய்ப்புண்டு. காஸ் கசிவு வந்த மறுகணம், பராமரிப்பு வேலைகளில் இறங்குவது நல்லது. வண்டிக்குள் பெட்ரோல், டீசல், மதுபானங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நைட்ரஜன் காற்று: டயரிலுள்ள காற்றின் அழுத்தத்தை, அடிக்கடி பரிசோதிப்பது நல்லது. சாதாரண காற்றைவிட, நைட்ரஜன் காற்றை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில், அதிகமாக சூடேறாது. ஒவ்வொரு நாளும் வாகனத்தை ஓட்டும் முன், Œக்கர அழுத்தம், பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், பேட்டரி டிஸ்டில்ட் வாட்டர், லைட் போன்றவைகளை சரிபார்க்கவும். இதிலுள்ள குறைபாட்டை தெரிவிக்கும் வார்னிங் லைட், சரியாக செயல்படுகிறதா என்றும் சரிபார்க்க வேண்டும்.
கவனம் முக்கியம்: காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மது குடித்து ஓட்டுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்கவும். ஷீட் பெல்ட் அணிந்து ஓட்டுவது சிறந்தது. வாகனத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை அணுகி பழுதுபார்ப்பது நலம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)