இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் அபாயம்இந்திய உணவு கழகத்தின் நடவடிக்கையால்..தமிழகத்தில் 450 அரிசி ஆலைகள் மூடும் ... ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சாதுர்யமும் சிக்கனமும் கொண்ட மஹிந்திராவின் புதிய மேக்சிமோ ப்ளஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
11:10

உறுதியான வாகனங்களுக்கு பெயர்போன மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய மேக்சிமோ பிளஸ் மினி ட்ரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதில் உள்ள 'ப்யூவல் ஸ்மார்ட்' தொழில்நுட்பம் ஓட்டுனர் தன் தேவைக்கேற்ப பயணத்திற்கு அதிக சக்தி வேண்டுமா அல்லது மைலேஜ் வேண்டுமா என்பதை ஒரு சுவிட்ச் மூலம் தீர்மானித்துக் கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது.
புதிய மேக்கிமோ ப்ளஸ் அதிக சுமையை விரைவாக சுமந்து செல்லும் 26 பிஎச்பி சக்தியையும், லிட்டருக்கு 21.9 கிலோ மீட்டர் மைலேஜையும், நீண்ட வீல்பேஸ் மற்றும் வலிமையான கியர் சஸ்பென்ஷன் அதிக சுமையிலும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு அல்லது 60 ஆயிரம் கிலோ மீட்டர் உத்திரவாதத்துடன் வருகிறது மாக்சிமோ ப்ளஸ். மேலும் இதன் விலை பி.எஸ் 3 மாடல் 3.53 லட்சம் ரூபாய் (சென்னை ஷோரூம் விலை) பிஎஸ்4 மாடல் ரூ.3.58 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுமையான ஃப்யூவல் ஸ்மார்ட் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே மேக்சிமோ ப்ளஸ் இல் தான் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. அதிக சக்தி தேவைப்படும் தருணங்களான கூடுதல் எடை, மலையேற்றம் அல்லது விரைவாக நீண்ட தூரம் செல்ல நேரிடும் போது ஒரு சுவிட்சை அழுத்துவதன் மூலம் அதிக சக்தி நிலைக்கு வைத்துக் கொள்ளலாம். வண்டி காலியாக ஓடும் போதும், நகர சாலைகளில் நிதானமாக செல்லும் போது, மலையிலிருந்து இறங்கும் போதும் மைலேஜ் நிலைக்கு சுவிட்சை மாற்றிக் கொள்ள வண்டி சிறந்த மைலேஜை வழங்கும்.மேக்சிமோப்ளசின் 7 லீஃப் பின்புற சஸ்பென்ஷன் அதிக எடையை கரடு முரடான சாலைகளில் ஏற்றி செல்ல உதவுகிறது. 1950 மிமி கொண்ட நீண்ட வீல் பேசும், சரக்குகள் ஏற்றிச் செல்லும் பகுதி வலிமையாகவும் 35 சதுரடி பெரிய அளவில் இருப்பதும், மற்றும் 850 கிலோ எடையை ஏற்றிச்செல்லும் திறனும் இதன் உறுதியை காட்டுகிறது.
இதன் கேபின் நன்கு விஸ்தாரமாகவும், அதிக குஷன் கொண்ட இருக்கைகளுடனும், ஓட்டுனரின் பக்கத்தில் அமர்பவர் படுத்து உறங்க வசதியான நீளமான சீட்டும் மேக்சிமோ ப்ளஸில் இருக்கிறது. கேபிள் மூலம் இயக்கப்படும் கியர் ஷப்ட் மிக மென்மை
யாகவும் சுலபமாகவும் உள்ளது. சரக்கு பகுதியில் படிக்கட்டு, விண்ட்ஷீட் வைப்பர், ஸ்ப்ரே சிஸ்டம், மொபைல் சார்ஜிங் வசதி, சன் வைசர் போன்ற வசதியளிக்கும் அம்சங்கள் இதில் இருக்கிறது. மேலும் இதில் ஓட்டுனரின் வசதிக்கென ஹேண்ட் ப்ரேக், டெட்பெடல், சாப்ட் டச் ஸ்டியரிங் வீல், பெரிய ரியர் விண்டோ மற்றும் விண்ட்ஷீல்ட் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.மேக்சிமோ ப்ளஸில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பூஸ்டர் அசிஸ்டெட் ப்ரேக்குகள், லோகு சென்சிங் ப்ரபோர்ஷனேட் வால்வுகள், முன்பக்க கிராஷ் புரோடெக்டர், என்ஜினிலிருந்து உடனடி திறனை கொடுக்கும் ட்ரைவ் பை ஒயர் ஆக்சிலரேட்டர் முறை போன்றவைகளாகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வர்த்தக வாகனம் வாங்குவோருக்கு சிறந்த விற்பனை அனுபவத்தை உணர்ந்து ஷோரூம்களில் கம்ப்யூட்டர் டேப்லட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற சிறந்த வாகனத்தை தேர்ந்தெடுக்க முடியும். விற்பனைக்கு பிந்தைய சேவைக்கென மஹிந்திரா நிறுவனம் உள்ளூர் மெக்கானிக்களுக்கு மேக்சிமோ ப்ளஸ் சர்வீஸ் செய்வதற்கான பயிற்சியை கொடுத்துள்ளது. இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகமுடியும் என்பதும் வரவேற்கதக்கதாகும். தொழில் புரிவோர்களின் உற்ற தோழனாக அவர்களின் தொழில் வளத்தை பெருக்கி வந்துள்ளது மேக்சிமோ ப்ளஸ்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)