ஏற்றத்துடன்  தொடங்கியது வர்த்தகம்ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ...
ரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4ஜி தொழில்நுட்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2013
10:07

கூடுதல் வேகத்தில் செயல்படக்கூடிய 4ஜி அலைவரிசையினை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வர, சாம்சங் நிறுவனத்தின், எல்.டி.இ. தொழில் நுட்பத்தினை, ரிலையன்ஸ் வாங்குகிறது. அத்துடன், ரூ.5,500 விலையில் தொடக்க நிலை 4ஜி மொபைல் போன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவும் சாம்சங் ஒத்துக் கொண்டுள்ளது. இந்த மொபைல் போன்கள், ரிலையன்ஸ் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களில் மட்டுமே செயல்படும். இந்த திட்டங்களையும் தொடக்க நிலையில் ரூ.100க்கு வழங்க ரிலையன்ஸ் திட்டமிடுகிறது. தற்போது இதே விலையில் 3ஜி மொபைல் போன் சந்தையில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தினால், சாம்சங் நிறுவனம் இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் வலுவாகக் கால் ஊன்றும் வாய்ப்புகள் பெருகும். மொபைல் போன் விற்பனையைப் பொறுத்தவரை, இந்தியா, உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தன் பங்கினை அதிகப்படுத்துவதன் மூலம், அமெரிக்க மக்களிடம் ஆப்பிள் நிறுவனப் போன்களுக்கு எதிராகத் தன் போன்களை நிறுத்த முடியும் என சாம்சங் திட்டமிடுகிறது.
4ஜி அலைக்கற்றை வரிசையில், மொபைல் போன் தொடர்புகளை ரிலையன்ஸ் வழங்க இருப்பதை, மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். குறைந்த விலையிலான மொபைல் போனுடனும், குறைந்த கட்டணத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் சேவையுடனும், 4ஜி அறிமுகப்படுத்தும் நிலையில், இதன் தாக்கம் நம் மக்களிடையே அதிகமாக இருக்கும். மற்ற மொபைல் போன் சேவை நிறுவனங்கள் இதற்கு ஈடாக ஏதேனும் செய்திட வேண்டும். இல்லையேல் அவர்கள் மொபைல் சேவை சந்தையில் தங்கள் பங்கினை இழக்க வேண்டியதிருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)