பதிவு செய்த நாள்
23 மார்2013
14:08

ப்ரென்ச் வாகன உற்பத்தி நிறுவனமான ரெனோவின் டஸ்டர் ஒரு அழகான, அடக்கமான, கம்பீரமான எஸ்.யு.வி. ஐந்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய டஸ்டர் மிக உறுதியாக எல்லா விதமான சாலைகளுக்கும் ஏற்பவும், மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப வசதியாகவும், மிக நீளமான பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லக்கூடிய வசதியுடன் இருக்கிறது. வெறும் பயணம் என்பது மட்டுமின்றி மலையேற்றம், சாகச பயணம், காட்டுப்பாதைகளில் பயணம், விடுமுறைப்பயணம் என்று செல்பவர்கள் தங்களின் சைக்கிள், மீன் தூண்டில், சர்ஃபிங் போர்டு, ஸ்கேட்டிங் போர்ட், ஸ்கீயிங் போர்ட் என்று செல்ல இந்த எஸ்யுவி மிக வசதியானதாக உள்ளது. அதே நேரம் நகரப் போக்குவரத்திற்கும், நெரிசலான சந்துகளில் செல்வதற்கும், கூட எளிதாக இருக்கும் வண்ணம் டஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரெனோ லொகேனிங் ப்ளாட் ஃபார்மில் கட்டப்படும் டஸ்டர் 4.31 மீட்டர் நீளமும் 1.82மீட்டர் அகலமும் 205 மிமி க்ரவுண்ட் க்ளயிரென்சும் கொண்டுள்ளது. டஸ்டர், பெட்ரோல் (2), டீசல் (8) என்று இரண்டு வேரியன்டகளில் மொத்தம் 10 மாடல்களில் கிடைக்கிறது. இதில் டீசல் வேரியன்ட்டிங் 110 PS RXZ மாடலிலும் 85 PS RXZ மாடலிலும் மீடியா நேவ் சிஸ்டம் என்று ஒரு புது தொழில்நுட்ப சாதனம் காரின் டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மிகவும் நவீன நேவிகேஷன் சிஸ்டத்துடன் இணைந்த பொழுதுபோக்கு மற்றும் தொலைத் தொடர்பு அம்சங்கள் கொண்டுள்ளதாக இருக்கிறது. ரேடியோ, பாட்டுகேட்க மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன், வரைபடம், நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்றவைகள் சேர்ந்த டிஜிட்டல் டச் ஸ்கிரீன் கொண்ட இச்சாதனம் சாதுர்யமாக இயங்க மற்றும் இயக்கக் கூடியதென்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ரெனோ டஸ்டரின் டீசல் வேரியன்ட்டிவ் 1.5லிட்டர் டீசல் என்ஜின் 1461சிசி திறன் கொண்டது இது 84 bhp பவரும் 200 NM டார்க்கும் வழங்கக்கூடியதாகவும், 108.5 bhp பவரும் 248 NM டார்க்கும் வழங்கக் கூடியதாகவும் இரண்டு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வர்ஷனில் 1.6லிட்டர் DOHC பெட்ரோ என்ஜின் 1598சிசி திறன் கொண்டதாகவும் 5850 ஆர்பிஎம்மில் 100.5 bhp பவரையும் 3750 ஆர்பிஎம்மில் 145 டார்க்கை வழங்கக்கூடியதாகவும் உள்ளது. சிறந்த மைலேஜ் தரக்கூடிய டஸ்டரின் டீசல் 85 ps 30.45 கிலோமீட்டர் லிட்டருக்கு கொடுக்கக் கூடியதாகவும் இதன் DC 110ps என்ஜின் 19.01 கிலோமீட்டர் லிட்டருக்கு கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது. மேலும் இதன் பெட்ரோல் என்ஜின் 13.24 கிலோமீட்டர் லிட்டருக்கு கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறு நிறங்களில் கிடைக்கும் டஸ்டரின் தோற்றம் சற்றே உயரமாகவும், நீளமாகவும் இருப்பதுடன், மேற்கூரையில் உள்ள ரெயில், அகலமான க்ரோம் க்ரில் போன்றவையும் சேர்ந்து இதன் கம்பீரமான ஆளுமையை பிரதிபலிக்கிறது. இதன் டபுள் ஆப்டிக் ஹெட்லேம்ப், தட்டையான பானட், பெரிய அகலமான டின்டட் வின்ட் ஷீல்ட், காற்றின் சத்தத்தையும் அதிர்வையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆன்டென்னா (இதன் ஏரோடைனமிக் டிசைனிற்கு சான்றாக விளங்குவது) போன்றவை டஸ்டரின் கம்பீரமான எடுப்பான தோற்றத்திற்கு காரணமானவைகளாகும்.
டஸ்டரின் உட்புற வடிவமைப்பு ஐந்து பேருக்கு தேவையான ஹெட், ஷோல்டர் மற்றும் லெக் ஸ்பேஸ் தாராளமாக கொடுக்கக்கப்பட்டுள்ளது. 3 ஸ்போக் கொண்ட பவர் ஸ்டியரிங், இரண்டு ஏசி வென்ட் முன்புறமும் பின்புறமும் உள்ளவர்கள் தங்கள் தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய ஏசி வென்டர்கள் பின்புறமும் உள்ளதும், வளைவான அதே நேரம் ஸ்போர்டியான தோற்றம் கொண்ட டாஷ்போர்டும், 8 வித அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட ஓட்டுனர் இருக்கையும் இதன் உட்புற சொகுசு அம்சங்களுக்கான சில எடுத்துக்காட்டுக்கள்.
டஸ்டரின் பாதுகாப்பு அம்சங்கள் எனில் இபிடி மற்றும் ப்ரேக் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மாட்யூல் கொண்ட ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்யூவல் ஏர்பேக், கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் இம்பேக்ட் சென்சார், என்ஜின் ப்ரொடெக்ஸ் அன்டர் கார்ட் என்று தரத்தில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளாத பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது ரெனோ. என்ஜின் இம்மொபலைசர், சென்ட்ரல் லாக்கிங், பின்புற டீ ஃபாரக்கர், பின்புற கண்ணாடிக்கான வாஷர் மற்றும் வைப்பர், ஓட்டுனரின் சீட் பெல்ட் ரிமைன்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், முன்புற ஃபர்க் லாம்ப் என்ற எல்லா அம்சங்களும் ஹைஎன்ட் மாடல்களில் கிடைக்கின்றன. நகரப் போக்குவரத்திற்கோ அல்லது கரடுமுரடான பாதைகளின் பயணத்திற்கோ சிறந்த செயல்திறனுடன் சொகுசாக பயணிக்கவும் அதே நேரம் நியாயமான விலையுடனும், எஸ்யுவி செக்மன்ட்டில் ரெனோவின் டஸ்டர் சக்கைபோடு போடும் என்பது உறுதியே.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|