விளையாட்டு பொருட்களுக்கு உற்பத்தி வரியை நீக்க கோரிக்கை :  - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -விளையாட்டு பொருட்களுக்கு உற்பத்தி வரியை நீக்க கோரிக்கை : - பிசினஸ் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ...
ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:45

சென்னை: "வரும் ஜூன் மாதம் வரை, பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும்' என, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013-14ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரையை, தமிழக மின் வாரியம் சமர்ப்பித்துள்ளது. மத்திய மின் தீர்ப்பாயம் உத்தரவின்படி, தமிழக மின் வாரியம், மின் கட்டண உயர்வு பரிந்துரையை, நவம்பர், 30ம் தேதியிலேயே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
உத்தரவுப்படி, மின் வாரியம் கட்டண உயர்வு பரிந்துரையை சமர்பிக்கவில்லை. ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின்பேரில், பிப்ரவரி, 19ம் தேதி மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சமர்ப்பித்தன. அதனுடன், 81 நாள் தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற இருந்த நிலையில், மின் ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சாமி, வேணுகோபால் ஆகியோர் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், புதிய மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மின் தொடரமைப்பு கழகத்தின் புதிய மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை, ஆணையம் வெளியிடும் வரையிலோ அல்லது ஜூன், 20ம் தேதி வரையிலோ, தற்போதுள்ள மின் கட்டணமே அமலில் இருக்கும். மேலும், இந்த மனுக்களின் மீதான விசாரணையும் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)