நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடுநலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128  உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிசான் இவாலியா சாலையில் நடத்தும் இசைக் கச்சேரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
10:00

நிசான் இந்தியா நிறுவனத்தின் வெளியீடு நிசான் இவாலியா பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை சாலையில் நடத்துவது போல் அனுபவிப்பவரை கவர்ந்திழுக்கிறது. மெய்மறக்கச் செய்கிற இதன் இசைப்பயணம், அது பெரிய குடும்பத்தினர் சேர்ந்துச் செல்லும் சுற்றுலாவோ அல்லது நண்பர் பட்டாளத்துடன் செல்லும் குதூகலப்பயணம் எதுவாகிலும் சரி. தற்பொழுது மேம்படுத்தப்பட்டு இவாலியாவில் இரண்டு பக்கங்களில் ஸ்லைடிங் கதவுகளும், ரியர் வ்யூ கேமராவும், ஐ-கீ என்ற இன்டெலிஜன்ட் கீ சிஸ்டமும், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டரும் என்று நவீன தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நிசான் இவாலியாவின் வெளித்தோற்றம் மிக எளிமையாகவும் அதே நேரம் மிக ஸ்டைலாகவும் இருக்கிறது. நிமிர்ந்து நிற்பது போன்ற உயரமும், மெல்லிய முன்புற கதவுகள், குட்டையா பானட், சற்றே சரிந்த ஹெட்லைட் என்று இதன் தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. பெட்டி போல் அமைக்கப்பட்டுள்ள இதன் பின்புறமும் சற்றே இறக்கமான டெயில் லாம்பும் இதன் அழகை மேம்படுத்துகிறது. மஹிந்திரா ஜைலோ மற்றும் டொயோடா இனோவாவிற்கு கடும் போட்டியாக இருக்கும் நிசான் இவாலியா நிசான் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு சர்வதேச அளவில் இவ்வருட சர்வ‌தேச சிறந்த வேன் என்ற பரிசை 2012ஆம் ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெரிதாக கருதப்படுவது மைலேஜ் என்பதால் நல்ல எரிபொருள் சிக்கனம் கொடுக்கக் கூடியதும், அதே நேரம் 85 bhp, 3760 rpm பவரும் 200 NM/1900 rpm டார்க்கும் வழங்கக்கூடிய 1.5 லிட்டர் DC டீசல் என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1461சிசி திறன் கொண்ட இந்த என்ஜின் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைந்து டர்போ லேக் இல்லாத ஸ்மூத்தான பயணத்தை வழங்குகிறது. இதன் என்ஜின் 1.5லிட்டர் கொண்டது என்றாலும் 2.2 முதல் 2.5 லிட்டர் கொண்ட மற்ற எம்பிவி(MPV)களுக்கு இணையான இதன் செயல்திறன் இருப்பதற்கு இதன் எடைக்குறைவே காரணம் எனலாம். இதனாலேயே இதன் ஆக்சிலரேஷன் 0-100 கிலோமீட்டர் மணிக்கு என்ற வேகத்தை 17.5 நொடியில் அடைகிறது. அதிகபட்சமாக மணிக்கு 140கிலோமீட்டர் என்ற வேகத்தை இது எட்டுகிறது.
இவாலியாவின் உட்புறம் மிக அதிக இடவசதியுடன் ஏழு பேர் தாராளமாய் அமர்ந்துச் செல்லக்கூடிய வகையிலும் பொருட்கள் வைக்க நல்ல இடவசதியுடனும் உள்ளது. ஏறுவதற்கு சுலபமாக தாழ்வாகவும், நல்ல தரமாகவும் தேவையான சொகுசு அம்சங்களுடனும் இதன் உட்புறம் பயணிகளின் தேவையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவையான அளவு குஷனுடன் அடி முதுகு மற்றும் தொடைக்கு சப்போர்ட் கொடுக்கக்கூடிய வகையில் இதன் சீட்கள் இருக்கின்றன. பெட்டி போன்ற இதன் நடு மற்றும் பின்புற வடிவமைப்பு பின்புற இரண்டு வரிசை பயணிகளுக்கும் மிகவும் வசதியான பயணத்தை வழங்குகிறது. இதன் சக்தி வாய்ந்த ஹீட்டிங் வென்ட்டிலேஷன், ஏர் கன்டிஷனிங் சிஸ்டத்தினால் காரின் மூன்று அடுக்குகளுக்கு உடனடியாக சீரான குளிர்ச்சியை காற்றோட்டத்தையும் அளிக்கிறது. இவாலியாவின் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்யூனல் ஏர்பேக், மூன்றாவது வரிசைக்கும்
கொடுக்கப்பட்டுள்ள சீட் பெல்ட், இபிஐ மற்றும் ப்ரேக் அசிஸ்ட் சேர்ந்த ஏபிஎஸ், ஸ்பீட் சென்சிங் டோர் லாக், கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் இன்டிகேட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், வை மெனைடட் ஸ்டாப் ‌லேம்ப், இம்மொபலைசர் - ஐ கீயுடன் உள்ளது போன்றவை பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கிறது. குறுகலான சந்துகளிலும் செல்லும் போதும், வண்டியை சட்டென்று திருப்புவதற்கும், நெரிசலான போக்குவரத்தில் ஓட்டும்போதும் ஒரு பெரிய வேனை ஓட்டுவது போல் அல்லாமல் ஒரே செடான் காரை ஓட்டுவது போன்ற சுலபமான சுகமான அனுபவத்தையே இவாலியா வழங்குகிறது. நகரத்தில் பார்க்கிங் செய்ய வசதியாய் ரியர் வ்யூ கேமரா, குறுகிய பார்க்கிங்கிலும் இடத்தை அடைக்காத ஸ்லைடிங் டோர், பெரிய குடும்பத்திற்கான இடவசதி, ஓட்டுவதற்கு லகுவாகவும் அதேநேரம் சிறந்த செயல்திறன் மற்றும் பிக்அப் கொண்ட என்ஜின் தொழில்நுட்பம், எரிபொருள் சிக்கனம் தரும் மைலேஜ் மற்றும் மதிப்பிற்கேற்ற விலையில் உள்ளது இவாலியா. மொத்தத்தில் நிசான் இவாலியாவின் பயணம் என்பது சிறந்த இசைக்கருவிகளையும் இசைக் கலைஞர்களையும் கொண்டு நடத்தும் ஆரவாரமான இசைக் கச்சேரியாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)