பதிவு செய்த நாள்
02 ஏப்2013
10:35

உலகின் நெ.1 ட்ரக் உற்பத்தி நிறுவனமான டெ#ம்லர் ஏஜியின் இந்திய துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கல் பிரைவேட் லிமிடெட் தற்சமயம் பாரத் பென்ஸ் வரிசையில் 3 லகு ரக ட்ரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 9 டன் ரிஜிட் 914, 12டன் ரிஜிட் 1214 மற்றும் 12 டன் டிப்பர் 1217 என்ற மாடல்களின் முதல் இரண்டும் சரக்கு போக்குவரத்திற்கும், மூன்றாவது கட்டுமானத்துறைக்கும் என்று
வடிவமைக்கப்பட்டுள்ளது. டெய்ம்லர் இந்தியா பாரத் பென்ஸ் வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியாவை கருதுவதால் தரம், உறுதி, நம்பிக்கை, திறன் என்று எல்லாவற்றிலும் சிறப்பான வாகனங்களை இந்திய வணிகர்களின் தேவையை அறிந்து அளிக்கிறது என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
டெய்ம்லர் ட்ரக்குகளின் தொழில்நுட்பத் தளமாக உள்ள FUSO ஃபைட்டர் சேஸிஸ் மற்றும் Fuso காண்டர் கேபிற்கும் அடித்தளமாக அமைக்கப்பட்டுள்ளது. டெய்ம்லர் ட்ரக்குகளின் வெற்றிக்கு காரணமான முழுமையான பரிசோதனை ஓட்டமாக கிட்டதட்ட 7.5 மில்லியன் கிலோமீட்டர் ஓட்டி பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாரத் பென்சின் இம்மூன்று ட்ரக்குகளும், ஜப்பானிய மற்றும் ஜெர்மன் பொறியாளர்களின் தொழில்நுட்ப அனுபவங்களையும், இந்திய பொறியாளர்களின் உள்ளூர் சாலை அமைப்பு, தேவை மற்றும் விலைக்கட்டுபாட்டு உத்திகளை பயன்படுத்தியும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது பாரத் பென்ஸின் இம்மூன்று ட்ரக்குகளும். இம்மூன்று ட்ரக்குகளும் 4D34ல் 4 சிலிண்டர் கொண்ட CRD (காமன் ரெயில் டைரக்ட் இன்ஜெக்ஷன்) என்ஜின் கொண்டுள்ளது. 140 ஏக பவர் 914 மற்றும் 1214 மாடல்களில் கொடுக்கக்கூடியதாகவும், 170 ஏக பவரை 1217 மாடலில் கொடுக்கக்கூடியதாகவும் இதன் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரக் என்ஜின்கள் நிறைந்த எரிபொருள் சிக்கனமும், நல்ல சொகுசான கேபினும், முழுமையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனமாகவும் பாரத் பென்சின் ட்ரக்குகள் விளக்குகின்றன.
நாடெங்கிலும் கிளைகள் உள்ள டீலர்ஷிப் மூலம், பாரத் பென்ஸ் ட்ரக்குகளை சுலபமாக பெற முடியும். முழுவிவரம் அளிக்கும் விற்பனைச்சேவை விற்பனைக்கு பின் சேவை 24 x 7 நாட்கள் என்பதும், ரோட் சைட் உதவிகள், வொர்க் ஷாப்களில் குறைவான நேரமே தேவைப்படுவது போன்றவை வாடிக்கையாளர்களை கவரக் கூடிய அம்சங்களாகும்.
டெய்ம்லரின், பினான்ஷியல் ஆர்ம் மூலமாக கடனுதவிகளும், பாரத் பென்ஸ் பினான்ஷியல் என்ற பெயரில் கிடைக்கிறது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக வணிக வாகன காப்பீட்டை பணம் செலுத்தும் அவசியம் இல்லாத, ஜீரோ டெப்ரிசியேஷன் மற்றும் பல சலுகைகள் மூலம் பாரத் பென்ஸ் இன்சூரன்ஸ் வழங்குகிறது. வாகன விற்பனை, பழுதுச்சேவை, கடனுதவி மற்றும் காப்பீடு என்று எல்லாம் ஓரிடத்திலேயே கிடைப்பது,வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|