பதிவு செய்த நாள்
04 ஏப்2013
01:01
சென்னை:கடந்த ஒரு சில தினங்களாக தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு, 48 ரூபாயும், சவரனுக்கு, 384 ரூபாயும் சரிவடைந்து, ஒரு சவரன், 21,864 ரூபாயாக குறைந்து போனது.
சுத்த தங்கத்தின்விலை, (10 கிராம்) 515 ரூபாய் குறைந்து, 29,230 ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்க பொருளாதாரம், மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி தென்படுகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து, பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.உள்நாட்டை பொறுத்தவரை, தங்கம் மீதான இறக்குமதி வரி மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால், தங்கம் வாங்குவது குறைந்து, அதன் விலை சரிவடைந்து வருகிறது என, சென்னையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலையும், 1,525 ரூபாய் குறைந்து, 51,095 ரூபாய்க்கு விற்பனையானது.நாட்டின் வர்த்தக தலைநகரமான, மும்பையிலும், நேற்று, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவுஅடைந்து காணப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|