தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 7,700 கோடி உயர்வு நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 7,700 கோடி உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பார்த்தால் சாது! பயணித்தால் சாமர்த்தியசாலி-மஹிந்திராவின் சென்ட்யுரோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
14:33

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிரிமியம் என்ட்ரி லெவல் பைக் சென்ட்யுரோ. இந்த 110சிசி பைக் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் சில வித்தியாசமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் முழு அளவு கொண்ட முன்புற கௌல், டின்டட் வைசர், தங்க நிற இரட்டை பைப் வடிவம் ஃப்யூவல் டாங்கிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்றவை இந்த பைக்கிற்கு ஒரு வித்தியாசமான அழகை கொடுத்துள்ளது. சென்ட்யுரோவில் நிறைய எலக்ட்ரானிக் சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், மற்ற செக்மண்ட்களில் இல்லாத அளவு கொடுக்கப்பட்டுள்ளது.
'ஆறாவது அறிவாக' இயங்கும் இந்த அம்சங்கள் இந்த பைக்கின் சொந்தக்காரரை பெருமைக் கொள்ளச் செய்யும் என்றே கூற வேண்டும்.
சென்ட்யுரோவின் செயல்திறன்: இதன் 106சிசி 4 ஸ்ட்ரோக், மோனோ சிலிண்டர் கொண்ட என்ஜின் 7500ஆர்பிஎம்மில் 8.5 bhp பவரையும் 5500 ஆர்பிஎம்மில் 8.5 nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 'அப் ஷிஃப்ட் பேடர்ன்'னில் 4 ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது. 0-60 கிலோ மீட்டர் மணிக்கு என்ற வேகத்தை 85 நொடியில் அடைகிறது. 3000 ஆர்பி எம்மிற்கு மேலே போகும்போது இதன் வேகமும் செயல்திறனும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதன் மைலேஜூம் சிறப்பாகவே இருக்கிறது. சென்ட்யுரோவில் மட்டுமே உள்ள சிறப்பு அம்சங்கள்: இதன் MCI 5 என்ற மைக்ரோ சிப் இக்னைட்டட் 5 கர்வ் என்ஜின் சிறந்த செயல்திறனையும் எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. இதன் 'ஆன்ட்டி தெஃப்ட்' சிஸ்டம் யாராவது பைக்கை திருட முயன்றால் 'அலாரம்' சத்தம் எழுப்பி எச்சரிப்பதுடன் என்ஜினையும் லாக் செய்துவிடும். பார்க்கிங் லாட்டில் இருட்டில் நம் பைக் இருக்கும்போது தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் நம் வண்டியின் லைட்டை இயக்கி வண்டியை அடையாளம் காணலாம். இதன் 'கைட் லாம்ப்' வண்டியின் இக்னீஷனை அணைத்த பிறகும் கூட சிறிது நேரம் ஹெட்லைட்கள் எரிந்து நாம் செல்லும் பாதைக்கு ஒளிக்கூட்டும். இதன் சாவியில் உள்ள டார்ச்சில் (கீ டார்ச்) இருக்கும் எல்இடி விளக்கு பைக்கின் இக்னீஷன் லாக்கை இருட்டில் கண்டுபிடிக்க உதவுகிறது.
இதன் டிஜிட்டல் டாஷ்போர்டில் 'இன் பில்ட் அல்காரிதம்' உள்ளதால் பைக்கில் உள்ள பெட்ரோலைக் கொண்டு எவ்வளவு தூரம் வண்டி ஓடும் என்பதையும், எப்பொழுது வண்டியை சர்வீசிற்கு விட வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றது. ரிமோட் கண்ட்ரோல் உடனான 'வாட்டர் ப்ரூஃப் கீ' வசதியாய் உள்ளது. மஹிந்திரா சென்ட்யுரோவில் சீட் நல்ல அகலமாகவும் பின்புற இடுப்பிற்கு நல்ல சப்போர்ட் கொடுக்கக் கூடியதாகவும் வடிமைக்கப்பட்டுள்ளது. முன்புற 'ஃபுட் பெக்' கால்களை வசதியாக வைத்துக் கொள்ளவும் சற்றே உயரமாக உள்ள ஹாண்டில்பார் பிடித்துக் கொள்ள வசதியாகவும், ஹாண்டில்பாரில் உள்ள ப்ளாஸ்டிக் மென்மையாகவும் சுலபமாய் கையாளக் கூடியதாகவும் இருக்கிறது.
சென்ட்யுரோவின் இருசக்கரங்களுக்கும் ட்ரம் ப்ரேக் 130mm கொடுக்கப்பட்டுளளது. 173mm உடன் சிலிண்டர் கொண்ட என்ஜின் 1500 ஆர்பிஎம்மில் கிரவுன்ட் க்ளியரன்ஸ் இதில் சிறப்பாக உள்ளது. இதன் 1265mm கொண்ட வீல் பேஸ் நல்ல ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. ஹைட்ராலிக் ஃப்ரண்ட் ஃபோர்க் மற்றும் ஃபைவே அட்ஜஸ்டபிள் பின்புற ஷாக்அப்சார்பரும் இதில் சுகமாய் பயணிக்க உதவுகிறது. மொத்தத்தில் 110சிசி பைக் பார்க்க சாதுவாக, உள்ளே பல சாமர்த்தியமான அம்சங்களுடனும், சிறந்த மைலேஜூடன் பயணிக்க சுகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)