நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்புநோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு ... யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்நிகர லாபம் ரூ.527 கோடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்நிகர லாபம் ரூ.527 கோடி ...
மரணத்தை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழ்:"108' ஆம்புலன்ஸ் சேவை மூலம் வழங்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2013
01:10

மாதக்கணக்கில் நோய்வாய்பட்டு, வீட்டி@ல@ய இறப்போருக்கு, மருத்துவச் சான்றிதழை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை, "108' அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் களைய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.கடைசி முயற்சி:புற்றுநோய், சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆளாவோரில் பலர், மாதக்கணக்கில் வீட்டில் இருந்தபடி@ய, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள், மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்போது, கடைசி முயற்சியாக, மருத்துவமனையில் சேர்க்க, அவர்களின் உறவினர்கள், "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நாடுகின்றனர்.

நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், கருவிழி ஆகியவற்றை, ஆம்புலன்ஸ் பணியாளர் பரிசோதிக்கும்போதோ அல்லது அதற்கு முன்னரோ, நோயாளிக்கு மரணம் நிகழ்ந்திருந்தால், அதை, இறந்தவரின் உறவினர்களுக்கு, மறைமுகமாக தெரிவிக்கும், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், "இறந்த நபர், இதுவரை சிகிச்சை பெற்ற மருத்துவரிடம், அவரின் மரணத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்' என, தெரிவித்து விடுகின்றனர்.மருத்துவ Œõன்றிதழ்:சென்னை போன்ற பெருநகரங்களில், இறந்தவரின் உடலை தகனம் செய்ய, மருத்துவச் Œõன்றிதழ் அவசியம். இச்சான்றிதழை பெற, வீட்டில் இறப்பவரின் பிரேதத்தை, தனியார் ஆம்புலன்சில் ஏற்றி, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பணியாற்றும் மருத்துவமனைக்கு, இறந்தவரின் உறவினர்கள், பல கி.மீ., அலைய வேண்டி உள்ளது.

குறிப்பிட்ட மருத்துவர், அலுவல் காரணமாக, வெளியூரோ, வெளிநாடோ செல்ல நேர்ந்தால், வேறு மருத்துவரிடம், இச்சான்றிதழை பெற, இறந்தவரின் உறவினர்கள் படாதபாடு படுகின்றனர். இந்த நடைமுறை சிக்கலை களைய, மாதக்கணக்கில் நோய்வாய்பட்டு, வீட்டில் இறப்போர் பெற்று வந்த, சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை ஆராய்ந்து, உடல்நலக்குறைவால் தான் அந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்பது தெரியும்பட்சத்தில், மருத்துவச் சான்றிதழை, "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் அளிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

அதிகாரி தகவல்:இதுகுறித்து, "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும், இ.எம்.ஆர்.ஐ., நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஒருவரின் மரணத்தை, மருத்துவர் தான் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, "108' ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டால், அவர்களைக் கொண்டு, ஒருவரின் மரணத்தை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழை அளிக்கலாம்'' என்றார்.- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)