பதிவு செய்த நாள்
12 மே2013
00:17

புதுடில்லி:கரீப் பருவத்தில், நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு, இதுவரையிலுமாக, 1.88 லட்சம் ஹெக்டேராக குறைந்து உள்ளது. சென்ற ஆண்டு, இதே காலத்தில், 2.26 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.அசாம் மற்றும் ஒடிசாவில் நெல் விதைப்பு பணிகள் தாமதமானதால், இதன் பயிரிடும் பரப்பளவு குறைந்து உள்ளதாக, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவு, 40.30 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 45.54 லட்சம் ஹெக்டேராக உயர்ந்திருந்தது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.இதே காலத்தில், நாட்டில் சணல் பயிரிடும் பரப்பளவு, 6.40 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 6.86 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|