நாளை(மே 15) முதல் ஏர்-இந்தியாவின் ட்ரீம்லைனர் விமான சேவை துவங்குகிறதுநாளை(மே 15) முதல் ஏர்-இந்தியாவின் ட்ரீம்லைனர் விமான சேவை துவங்குகிறது ... தாவர எண்ணெய் இறக்குமதி29 சதவீதம் சரிவடைந்தது தாவர எண்ணெய் இறக்குமதி29 சதவீதம் சரிவடைந்தது ...
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி13.50 கோடி டன்னாக உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2013
00:42

புதுடில்லி:உள்நாட்டில், நிலக்கரி உற்பத்தி, குறைந்து போனதையடுத்து, கடந்த நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்கு மதி, 13.50 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, நிலக்கரி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செலவினம்:சர்வதேச சந்தையில், நிலக்கரியின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில், இறக்குமதி செய்யப்பட்ட, நிலக்கரிக்காக, 1,550 கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், மேற் கொள்ளப்பட்ட இறக்குமதி செலவினத்தை விட, ஏறக்குறைய,1 சதவீதம் அதிகம் என, ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரையில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வ தற்காக, நிலக்கரி இறக்குமதியில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
மின் நிறுவனங்கள்:மத்திய அரசும், இதன் இறக்குமதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுவதில்லை. ஏனெனில், நிலக்கரியை, மின் உற்பத்தி நிறுவனங்களும், வர்த்தகர்களும் இறக்குமதி செய்து கொள்கின்றனர்.குறிப்பாக, அதானி பவர், டாட்டா பவர், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி மற்றும் அரசுக்கு சொந்தமான, என்.டி.பி.சி., ஆகிய மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகஅளவில், நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்கின்றன.
உலகளவில், நிலக்கரி கையிருப்பில், இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. சர்வதேச ஆய்வு நிறுவனத் தின் புள்ளி விவரப்படி, இந்தியாவில், 28,600 கோடி டன் நிலக்கரி வளம் இருப்பதாக தெரியவந்து உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் மின் உற்பத்தி சரிவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அதன் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
அனல் மின் உற்பத்தி:மத்திய மின் ஆணையத்தின் புள்ளி விவரப்படி,நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தியில், 223.3 ஜிகா வாட் மின்சாரம், நிலக்கரியை அடிப்படையாக கொண்டுள்ளது.நம் நாடு பல்வேறு நிலக்கரி வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. இதில், அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி, சென்ற நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில், 9.72 கோடி டன்னாக அதிகரித்துஇருந்தது.
உருக்கு உற்பத்திக்கான சிறப்பு வகை நிலக்கரியின் இறக்குமதி, இதே காலத்தில், 1.2 சதவீதம் அதிகரித்து, 3.22 கோடி டன்னாக உயர்ந்திருந்தது.நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதியில், இந்தோனேஷியாவின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மீதமுள்ள நிலக்கரி, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.
சர்வதேச சந்தை:சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை,சரிவடைந்து வருகிறது. அதாவது,கடந்த, 2011- 12ம் நிதி யாண்டில், ஒரு டன் நிலக்கரியின் விலை, 105 டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 80.82 டாலராக குறைந் திருந்தது. ஆனால், தற்போது இதன் விலை, 87 டாலர் என்ற அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)