தங்கம் விலை சவரனுக்கு ரூ.144  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம் தமிழகத்தில் முட்டை விலை302 காசுகளாக நிர்ணயம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பீ.ஐ., நிகர லாபம்ரூ.3,299 கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2013
23:53

புதுடில்லி:இந்திய வங்கி துறையில், முதலிடத்தில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,) சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில், 3,299 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை (4,050 கோடி ரூபாய்) விட, 18.54 சதவீதம் குறைவாகும்.
இதே காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 33,959 கோடியிலிருந்து, 36,331 கோடி ரூபாயாக அதிகரித் துள்ளது. அதேசமயம், வங்கியின் நிகர வட்டி வருவாய், 4.42 சதவீதம் சரிவடைந்து, 11,596 கோடியாக குறைந் துள்ளது.கடந்த முழு நிதியாண்டில், வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 39,676 கோடியிலிருந்து, 51,189 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சதவீத அடிப்படையில், இது, 4.44 லிருந்து, 4.75 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11,707 கோடியிலிருந்து, 14,105 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நான்காவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது என்ற செய்தியால், நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இதன் பங்கின் விலை, 7.96 சதவீதம் சரிவடைந்து, 2,176.20 ரூபாய்க்கு கைமாறியது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)