பதிவு செய்த நாள்
26 மே2013
00:43
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை, சவரனுக்கு, 448 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,500 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 2,502 ரூபாய்க்கும், சவரனுக்கு, 16 ரூபாய் அதிகரித்து, 20,016 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 30 ரூபாய் உயர்ந்து, 26,765 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 46.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,465 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று, தங்கம் விலை கிராமுக்கு, 2,446 ரூபாய்க்கும், சவரனுக்கு, 19,568 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்த ஒரு வாரத்தில், தங்கம் கிராமுக்கு, 56 ரூபாயும், சவரனுக்கு, 448 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|