பதிவு செய்த நாள்
05 ஜூன்2013
23:48
சென்னை:நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்து, 20,400 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த, இரு தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று சற்று குறைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,552 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,416 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, இரண்டு ரூபாய் குறைந்து, 2,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 16 ரூபாய் சரிவடைந்து, 20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 20 ரூபாய் குறைந்து, 27,270 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 47.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|