பதிவு செய்த நாள்
18 ஜூன்2013
00:59
புது டில்லி:சென்ற மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 1,34,807 கோடி ரூபாயாக (2,451 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு மே மாதத்தில், 1,34,984 கோடி ரூபாயாக (2,478 கோடி டாலர்) இருந்தது என, மத்திய வர்த்தக துறை செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.ஆக, கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பு அடிப்படையில் 0.13 சதவீதமும், டாலர் மதிப்பு அடிப்படையில் 1.11 சதவீதமும் குறைந்துள்ளது.
அதே சமயம், நடப்பு நிதிஆண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்., - மே) ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 2.58 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 2.66 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. டாலர் மதிப்பில் ஏற்றுமதி, 4,857 கோடியிலிருந்து, 4,867 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இறக்குமதி:சென்ற மே மாதத்தில் நாட்டின் இறக்குமதி, 8.04 சதவீதம் உயர்ந்து, 2.27 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 2.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு அடிப்படையில் இறக்குமதி, 6.99 சதவீதம் அதிகரித்து, 4,173 கோடியில்இருந்து, 4,465 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில், நாட்டின் இறக்குமதி ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 11.93 சதவீதம் அதிகரித்து, 4.23 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய்:நடப்பு ஆண்டு மே மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 3.05 சதவீதம் அதிகரித்து, 1,458 கோடி டாலரில் இருந்து 1,502 கோடி டாலராக உயர்ந்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இதன் இறக்குமதி, 3.47 சதவீதம் உயர்ந்து, 2,813 கோடி டாலரில் இருந்து, 2,910 கோடி டாலராக அதிகரித்துள்ளது.கச்சா எண்ணெய் அல்லாத இதர பொருட்கள் இறக்குமதி, சென்ற மே மாதத்தில், 9.10 சதவீதம் அதிகரித்து, 2,716 கோடி டாலரில் இருந்து, 2,963 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில் இவற்றின் இறக்குமதி, 11.84 சதவீதம் அதிகரித்து, 5,141 கோடி டாலரில் இருந்து 5,749 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வர்த்தக பற்றாக்குறைஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததைஅடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 3,097 கோடி டாலரில் இருந்து, 3,793 கோடி டாலராக உயர்ந்து உள்ளது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|