பதிவு செய்த நாள்
29 ஜூன்2013
15:00
நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும், இந்த 2ஜி நோக்கியா ஆஷா 306 மொபைல் போன் தற்போது ரூ. 3,899 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் ஜி.எஸ்.எம். மினி சிம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பரிமாணம் 110.3 x 53.8 x 12.8 மி.மீ ஆக உள்ளது. எடை 96 கிராம். இதன் திரை ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாகத் தரப்பட்டுள்ளது. 3 அங்குல அகலத்தில் 240 x 600 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே கிடைக்கிறது. மல்ட்டி டச் வசதியும் கொண்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட் தரப்பட்டுள்ளது. 2 ஜிபி மெமரி கார்ட் இணைத்துத் தரப்படுகிறது. இதில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம், இதன் மெமரியை 32 ஜி பி வரை அதிகப்படுத்தலாம். இதன் உள் நினைவகம் 10 எம்பி. 32 எம்பி ராம் நினைவகம் இயங்குகிறது.
ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வை-பி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 2 எம்பி திறனுடன் கேமரா உள்ளது. வீடியோ இயக்கமும் கிடைக்கிறது. ஸ்டிரீயோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1110 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 14 மணி நேரம் பேசும் திறனை இது தருகிறது. மின் சக்தியை 600 மணி நேரம் தக்க வைக்கிறது. இதன் கதிர்வீச்சு 0.69 W.kg என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|