பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
19:10

புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார், ஷிவ் நாடார்.
நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் உள்ள ஷிவ் நாடார், 76 வயது நிறைவடைந்த நிலையில், 19ம் தேதியிலிருந்து அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், அவருடைய பரந்த அனுபவம் மற்றும் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர் நேற்று முதல் திட்ட ஆலோசகராகவும், கவுரவ தலைவராகவும், ஐந்து ஆண்டு காலம் செயல்படுவார் என நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
தற்போது, தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விஜயகுமார், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார் என்றும் நிர்வாக குழு தெரிவித்து உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|