பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
14:59

புதுடில்லி : ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங்மிஷின் மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்து, உலகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பு பொருட்களின் விலையை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை தலைவர் கமல் நந்தி கூறியுள்ளதாவது, ஏற்கனவே ஜூலை 1 முதல் எங்கள் நிறுவன பொருட்களின் விலையை உயர்த்த இருந்தோம். தற்போது ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சியால் விலையை 5 சதவீதம் உயர்த்தியுள்ளோம். இதனால் ஏசி., பிரிட்ஜ், வாஷிங்மிஷின் மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பொருட்களின் விலை ரூ.4,790 முதல் ரூ.44,800 வரை உயரக்கூடும் என்றார்.
கோத்ரேஜ் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி லாபம் ஈட்டுவதாகவும், அதில் 5 சதவீதம் விளம்பரத்திற்கு செலவிடுவதாகவும் நந்தி கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|