பதிவு செய்த நாள்
18 ஜூலை2013
23:55

புதுடில்லி:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் கனிமங்கள் உற்பத்தி, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 5.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், கனிமங்களின் உற்பத்தி மதிப்பு, 18,074 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஒட்டு மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பில், கச்சா பெட்ரோலியத்தின் பங்களிப்பு, 5,790 கோடி ரூபாய் (32 சதவீதம்) என்ற அளவில், மிகவும் அதிகமாக உள்ளது.
இதையடுத்து, நிலக்கரி (95,570 கோடி ரூபாய்) இரும்புத்தாது (2,923 கோடி), இயற்கை எரிவாயு (1,879 கோடி), பழுப்பு நிலக்கரி (514 கோடி) மற்றும் ”ண்ணாம்புக்கல் (389 கோடி ரூபாய்) உள்ளிட்ட கனிமங்கள் இடம்பெற்றுள்ளன.சென்ற மே மாதத்தில், உற்பத்தி செய்யப்பட்ட கனிமங்கள் மதிப்பில், மேற்கண்ட ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 94 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 432 லட்சம் டன்னாக உள்ளது. இது தவிர, 45 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியும், 293.50 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவும், 32 லட்சம் டன் கச்சா எண்ணெயும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.02 லட்சம் டன் பாக்சைட், 2.88 லட்சம் டன் குரோமைட், 12 ஆயிரம் டன் தாமிரம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்டவை தவிர, மதிப்பீட்டு மாதத்தில், 128 கிலோ தங்கமும், 131 லட்சம் டன் இரும்புத் தாதுவும், 17 ஆயிரம் டன் ஈயமும், 2.37 லட்சம் டன் மாங்கனீ”ம், 1.43 லட்சம் டன் துத்தநாகமும் உற்பத்தியாகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|