தங்கம் விலை சிறிது உயர்வுதங்கம் விலை சிறிது உயர்வு ...  டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அ‌சோக் லேலண்டு அறிமுகப்படுத்தும் ஸ்டைல் - பல்நோக்கு வர்த்தக வாகனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
17:13

மிகப்பெரிய வெற்றி பெற்ற "தோஸ்த்'தை தொடர்ந்து அசோக் லேலண்டு ஸ்டைல் என்ற பல்நோக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அசோக் லேலண்டு மற்றும் நிசான் மோட்டார் கம்பெனியின் கூட்டாண்மையில் சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள நிசான் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளிவருகிறது ஸ்டைல்.
ஸ்டைலின் சிறப்பம்சங்கள்:
7 முதல் 8 பேர் அமரக்கூடிய இடவசதியுடன் தாழ்தளமாகவும், நகரும் கதவுகளுடன் (ஸ்லைடிங்டோர்)உள்ளது ஸ்டைல்.
பெயருக்கேற்றாற் போல் உலகத்தரத்திலான ஸ்டைலுடன் லேசான மோனோகாக் பாடி கட்டமைப்பில் உள்ளது இவ்வாகனம்.
சத்தம், அதிர்வு இல்லாத சுகமான பயணம் அளிக்கும் சக்தி வாய்ந்த நவீன காமன் ரெயில்DIET டீசல் என்ஜின்.
டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இருவகைகளில் கிடைக்கிறது. மக்கள் போக்குவரத்து, ஹோட்டல் ஷட்டில் சேவை, டாக்சி சேவை, ஆம்புலன்ஸ், பேனல் வேன் மற்றும் கூரியர் சேவைகள் போன்றவைகளுக்கு "ஸ்டைல்' மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஸ்டைல் குறித்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உயர் அலுவலர்களின் கருத்துக்கள் பின்வருமாறு:-
ஹிந்துஜா குழுமத்தின் சேர்மன் ஹிந்துஜா வளர்ச்சிக்கான கூட்டாண்மை என்ற எங்களின் வழிகாட்டல் கோட்பாட்டிற்கேற்ப அசோக் லேலண்டு மற்றும் நிசான் உறவு ஒத்துழைப்பின் மூலமாக தோஸ்த் மற்றும் ஸ்டைல் வெற்றிகரமாக உருவாகியுள்ளது என்றும் இக்குழுக்கள் தன் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.
நிசான் - ரெனால்ட் அலையன்ஸ் தலைமை செயல் அலுவலர் கார்லோஸ் கோஸின் கூறுகையில், தங்களின் கூட்டு அசோக் லேலண்டின் விற்பனையையும் நிசானின் சிக்கன தயாரிப்பு திறனையும் உயர்த்தியிருப்பதுடன் நுகர்‌வோரின் விருப்பத்தேவையை நிறைவேற்றி வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
அசோக் லேலண்டு சேர்மன் தீரஜ் ஹிந்துஜா எமது வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு தோஸ்த்தை போலவே "ஸ்டைலும்' இந்திய வாடிக்கையாளர் மனதில் ஆழமான இடம் பிடிக்கும் என்றார்.
அசோக் லேலண்டு மற்றும் நிசான் அசோக் லேலண்டு பவர் டிரெய்ன் லிமிடெட் சேர்மன் டாக்டர் ”மந்திரன் கூறுகையில், "தோஸ்த்'தின் வெற்றிகரமான வரவேற்பை தொடர்ந்து விருதுகள் பல வென்ற ஒரு மேடை மீது எமது புத்தம் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)