பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
13:35

ஃபோர்ட் இந்தியாவின் இகோஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களிலேயே 30,000 திற்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கடையில் அறிமுக மாடலுக்கான சிறப்பு விலையுடன் வெளியிடப்பட்டது. இகோஸ்போர்ட் 10 வேரியன்ட்களில், 4 ட்ரிம்களில், மூன்று என்ஜின் தேர்வுகளுடன் மானுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், ஒரு ஆட்டோ ட்ரான்ஸ் மிஷனுடனும் ஏழு நிறங்களிலும் வெளிவருகிறது.
இந்த மாதம் 25ம் தேதி மெர்சிடெஸ் பென்ஸ் தன் E63 AMG காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெனோ - நிசான் கூட்டாண்மை இந்தியாவில் தங்களின் முதலீட்டை 5 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்தின் விளைவாய் புதிதாய் கார் வாங்குவோரின் எண்ணிக்கை உயரம் என்பதால் குறைந்த விலை கார்களை உற்பத்தி செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளதே இவ்வளர்ச்சிக்கு காரணம் என்கின்றனர் இந்நிறுவனத் தலைவர்கள்.
மிட்சுபிஷி மோட்டார்ஸ், இந்தியாவில் தங்களின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக பஜீரோ ஸ்போர்ட் ஆனிவெர்சரி எடிஷனை கொண்டு வந்துள்ளது. சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் உற்பத்திசாலையில் பஜீரோ ஸ்போர்ட் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள சொகுசு கார் நிறுவனமான ஆடி சமீபத்தில் ஆடி S6 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடியின் செடான் A6 இன் ஸ்போர்டி வெர்ஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|