பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
13:29

மாருதி நிறுவனம் வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட பல புதிய அம்சங்கள் கொண்ட இந்த வேகன்-ஆர் கார் தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதத்தில் இந்த அழகிய வேகன்-ஆர் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. வேகன்-ஆர் காருக்கு அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த புதிய டால் பாய் டிசைன் வேகன்-ஆர் ஸ்டிங்ரே கூடுதல் வாடிக்கையாளர் வட்டத்தை நிச்சயம் பெறும் வாய்ப்பு உள்ளது.
புரொஜெக்டர் ஹெட்லைட், அதற்கு இணையான முகப்பு கிரில், பெரிய ஏர்டேம், சைடு ஸ்கர்ட், புதிய அலாய் வீல்கள் ஆகியவை ஸ்டிங்ரேவுக்கு அதிக கவர்ச்சியை தருகிறது. வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரிலும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனே வரும். இந்த எஞ்சின் 67 பிஎச்பி ஆற்றலையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு குறைவாகவே. பின்புறத்தில் 60:40 என்ற விகிதம் கொண்ட மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் வேகன்-ஆர் காருடன் சேர்த்து விற்பனை செய்யப்படுமா அல்லது மாற்றாக அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இந்தியாவில் வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு புதிய காருக்கு போட்டோ ஷூட் நடத்தப்பட்டால், அடுத்த ஓரிரு மாதங்களில் அந்த கார் விற்பனைக்கு வருவது வழக்கம். எனவே, இன்னும் இரண்டு மாதங்களில் வேகன்-ஆர் ஸ்டிங்ரே கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்-ஆர் காரைவிட இந்த புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில் கூடுதல் விலையில் விற்பனைக்கு வரலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|