பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:11

சென்னை:ரெப்கோ வங்கியின் நிகர லாபம், நடப்பு 2013-14ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்), 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 14.50 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 21.38 சதவீதம் அதிகரித்து, 158 கோடியில் இருந்து, 192 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கியின் மொத்த வணிகம், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,605 கோடியில் இருந்து, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, 9,227 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இதில், திரட்டிய டெபாசிட், 23 சதவீதம் அதிகரித்து, 4,353 கோடியிலிருந்து, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, 5,348 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி வழங்கிய கடன், 19 சதவீதம் அதிகரித்து, 3,253 கோடியிலிருந்து, 3,879 கோடி ரூபாயாக (ஜூன் 30ம் தேதி வரையிலுமாக) உயர்ந்துள்ளது.ரெப்கோ வங்கி, 85 கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகிறது என, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் வரதராசன் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|