பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:17

புதுடில்லி:சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, 2.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, நடப்பு 2013-14ம் நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், கிட்டத்தட்ட 50 சதவீதமாகும்.நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, 5.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாகும்.
மதிப்பீடு:சென்ற 2012-13ம் நிதியாண்டில், நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.9 சதவீதமாக இருந்தது. அதாவது, சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், நிதிப்பற்றாக்குறை, 0.1 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த இலக்கில், கிட்டத்தட்ட, 50 சதவீதம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே எட்டப்பட்டு விட்டது. இதனால், பட்ஜெட் மதிப்பீட்டை விட, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மதிப்பீட்டு காலத்தில், மத்திய அரசின் செலவினங்கள் அதிகரிப்பிற்கு நிகராக, வருவாய் வளர்ச்சி அடையவில்லை. இதன் காரணமாகவே, நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது என, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல் காலாண்டில், மத்திய அரசின் மொத்த வருவாய், 1.19 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது. இது, முழு நிதியாண்டிற்கான வருவாய் மதிப்பீட்டில், 10.6 சதவீதமாகும்.அதே சமயம், இதே காலத்தில், மத்திய அரசின் செலவினங்கள், முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 23 சதவீதம், அதாவது, 3.82 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், மத்திய அரசின் வருவாயில், வரி வ‹ல் பிரிவின் பங்களிப்பு, 1.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வரி வசூல்:வழக்கமாக, ஒரு நிதியாண்டின் முதல் காலாண்டுகளில், வரி வசூல் குறைவாகவே இருக்கும்.இத்துடன், நாட்டின் பொருளாதார மந்தநிலையும், தொழில் துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சுணக்கமும், மத்திய அரசின் வருவாய் குறைய வழி வகுத்துள்ளது.மேலும், இறக்குமதி சரிவுஅடைந்து, அதன் வாயிலான ”ங்க வரி வ‹லும் குறைந்ததால், மதிப்பிட்டு காலாண்டில், ஒட்டு மொத்த வருவாய் குறைந்து உள்ளது.
இதே காலத்தில்,பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு, குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ததால், கிடைத்த வருவாயும் மிக குறைவாகவே இருந்தது.பொதுத் துறையை சேர்ந்த, கோல் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்கு விற்பனை மேற்கொள்ளப்படாமல், சிறிய நிறுவனங்களின் பங்குகளை விற்றதால், மத்திய அர”க்கு, 2,172 கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் கிடைத்து உள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், தொழிற் சங்கங்களின் எதிர்ப்பால், இந்த பங்கு விற்பனை தள்ளிப் போயுள் ளது.பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலை பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விற்பனையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
திட்டம் சாராத செலவுகள்:மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டில், மத்திய அரசின், திட்டம் சாராத செலவுகள், முழு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீட்டில், 24.1 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 2.67 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், திட்டம் சார்ந்த செலவுகள், பட்ஜெட் மதிப்பீட்டில், 20.7 சதவீதம், அதாவது, 1.15 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், வருவாய் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 55.4 சதவீதமாக, அதாவது, 2.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|