பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:15
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் குறைந்து, 21,248 ரூபாய்க்கு விற்பனையானது.ரூபாய் மதிப்பு சரிவால், சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று திடீரென குறைந்து காணப்பட்டது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,691 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,528 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் குறைந்து, 2,656 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 280 ரூபாய் சரிவடைந்து, 21,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 375 ரூபாய் குறைந்து, 28,405 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,525 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|