நடப்பு கரீப் பருவ நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும்நடப்பு கரீப் பருவ நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும் ... தொடர்ந்து சரிகிறது ரூபாயின் மதிப்பு : ரூ.60.70 தொடர்ந்து சரிகிறது ரூபாயின் மதிப்பு : ரூ.60.70 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2013
00:25

புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்திலும், நாட்டின் வாகன விற்பனை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாகவே காணப்பட்டது.எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, வாகன கடனுக்கான வட்டி உயர்வு போன்றவற்றால், வாகன விற்பனை, பல மாதங்களாக மந்தமாக உள்ளது.
இதுகுறித்து, மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (ஆட்டோமோட்டிவ் டிவிஷன்) பிரவின் ஷா கூறியதாவது:வாகன துறை, கடந்த சில மாதங்களாக மோசமாக உள்ளது. வாகனங்களுக்கான தேவை சரிவடைந்துள்ளது. பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன. வாகனத் துறை புத்துயிர் பெற, மத்திய அர” உடனடியாக சலுகைகளை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு பிரவின் கூறினார்.
மாருதி சுசூகி:சென்ற ஜூலை மாதத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 1.30 சதவீதம் உயர்ந்து, 82,234லிருந்து, 83,299 ஆக சற்று அதிகரித்துள்ளது.இதன், எம்800, ஆல்டோ, ஏ-ஸ்டார் உள்ளிட்ட கார்களின் விற்பனை, 15.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28,998ல் இருந்து, 33,587 ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம், நடுத்தர வகை கார்களின் விற்பனை, 11.9 சதவீதம் சரிவடைந்து, 15,759ல் இருந்து, 13,882 ஆக குறைந்துள்ளது.இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 27.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 11,210ல் இருந்து, 8,154 ஆக சரிவடைந்துள்ளது.
போர்டு இந்தியா:மதிப்பீட்டு மாதத்தில், போர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை, இதுவரை இல்லாத அளவில், 48 சதவீதம் அதிகரித்து, 12,338 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 8,323 ஆக இருந்தது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 26.15 சதவீதம் உயர்ந்து, 6,236ல் இருந்து, 7,867 ஆக உயர்ந்துள்ளது. இதன் கார் ஏற்றுமதி, இரண்டு மடங்கு அதிகரித்து, 2,087ல் இருந்து, 4,471 ஆக அதிகரித்துள்ளது.
ரெனோ இந்தியா:ரெனோ இந்தியா கார் விற்பனை, இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டு, 1,776ல் இருந்து, 3,736 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த கார் விற்பனையில், டஸ்டர் காரின் பங்களிப்பு, 3,089 ஆக மிகவும் அதிகரித்துள்ளது.
மகிந்திரா நிறுவனம்:மகிந்திர அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை, 21.17 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 47,059ல் இருந்து, 37,096 ஆக சரிவடைந்துள்ளது.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 19.41 சதவீதம் சரிவடைந்து, 42,799ல் இருந்து, 34,490 ஆக குறைந்துள்ளது.இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை, 6.45 சதவீதம் குறைந்து, 14,688ல் இருந்து, 13,740 ஆக சரிவடைந்துள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, 12.79 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 5,149ல் இருந்து, 4,490 ஆக குறைந்துள்ளது.
டொயோட்டா:சென்ற ஜூலை மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கார் விற்பனை, 10 சதவீதம் சரிவடைந்து, 16,062ல் இருந்து, 14,470 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 20.98 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 14,574ல் இருந்து, 11,515 ஆக சரிவடைந்துள்ளது.எனினும், இந்நிறுவனம், 2,955 எடியோஸ் வகை கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
டி.வி.எஸ்., மோட்டார்:சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை, 4.7 சதவீதம் சரிவடைந்து, 1,61,255 ல் இருந்து, 1,53,676 ஆக குறைந்து உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இருசக்கர வாகன விற்பனை, 7.1 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,57,945ல் இருந்து, 1,46,671 ஆக சரிவடைந்துள்ளது.உள்நாட்டில், இருசக்கர வாகன விற்பனை, 10.17 சதவீதம் குறைந்து, 1,40,862ல் இருந்து, 1,26,531 ஆக சரிவடைந்துள்ளது.அதேசமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை, 8.49 சதவீதம் வளர்ச்சி கண்டு, 53,355ல் இருந்து, 57,886 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 36.58 சதவீதம் அதிகரித்து, 19,142ல் இருந்து, 26,145 ஆக உயர்ந்துள்ளது.மூன்று சக்கர வாகன விற்பனை, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 3,301ல் இருந்து, 7,005 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)