அன்னிய செலாவணி கையிருப்பு  28,017 கோடி டாலராக அதிகரிப்பு அன்னிய செலாவணி கையிருப்பு 28,017 கோடி டாலராக அதிகரிப்பு ... தொழிலகங்கள் மூடப்பட்டதால்...சென்னையில்வேலைவாய்ப்பு 21 சதவீதம் குறைந்தது தொழிலகங்கள் மூடப்பட்டதால்...சென்னையில்வேலைவாய்ப்பு 21 சதவீதம் குறைந்தது ...
காபி ஏற்றுமதி 2.17 லட்சம் டன்னாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2013
01:21

நாட்டின் காபி ஏற்றுமதி, நடப்பு 2013ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், 2,17, 492 டன்னாக சரிவடைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,26,703 டன்) விட, 4 சதவீதம் குறைவாகும். கணக்கீட்டு காலத்தில், மதிப்பின் அடிப்படையில் காபி ஏற்றுமதி, 4.5 சதவீதம் குறைந்து, 3,210 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
பிரேசில்:டாலர் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 11.36 சதவீதம் சரிவடைந்து 67.33 கோடியில் இருந்து, 59.67 கோடி டாலராக குறைந்து உள்ளது. நடப்பு ஆண்டில் ஏற்றுமதிக்கான ஒரு டன் காபியின் சராசரி விலை, 1,47,605 ரூபாயாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டில் இதன் சராசரி விலை 1,48, 256 ரூபாயாக இருந்தது.
இதுகுறித்து, இந்திய காபி, ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப் பின் தலைவர் ரமேஷ்ராஜா கூறியதாவது: நடப்பு ஆண்டில் நாட்டின் காபி, ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 5 -10 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. எனவே, இது மதிப்பீட்டை ஓட்டியே உள்ளது.இந்தியாவிற்கு முக்கிய சந்தை களாகத் திகழும் மேற்கத்திய நாடுகளில், பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாகவே உள்ளது. இது, இந்திய காபி ஏற்றுமதிக்கு இடையூறாக உள்ளது.
மேலும், பிரேசில் நாட்டில் அரபிகா காபி உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் இதன் விலை மிகவும் குறைந்துள்ளது. இதுவும், நம் நாட்டின் காபி ஏற்றுமதி குறைவிற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு ரமேஷ் ராஜா தெரிவித்தார்.
இத்தாலி:நாட்டின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டை விட, நடப்பு பாண்டில், 6 சதவீதம் குறைந்து, 2.90 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி, 3.08 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாத காலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட காபியின் மறு ஏற்றுமதி, 31.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32,475 டன்னிலிருந்து, 42,792 டன்னாக உயர்ந்துள்ளது.
நம்நாட்டிலிருந்து இத்தாலி, ஜெர்மனி, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள், பெல்ஜியம், ஜோர்டான், ஸ்லோவேனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு, காபி மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)