காபி ஏற்றுமதி 2.17 லட்சம் டன்னாக சரிவுகாபி ஏற்றுமதி 2.17 லட்சம் டன்னாக சரிவு ... தேயிலை தூள் ஏல விற்பனையில் மந்தம் தேயிலை தூள் ஏல விற்பனையில் மந்தம் ...
தொழிலகங்கள் மூடப்பட்டதால்...சென்னையில்வேலைவாய்ப்பு 21 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2013
01:24

சென்னை:கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக, ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, சென்னையில், புதியவேலை வாய்ப்புகள், 21 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
ஆய்வறிக்கை:அசோசெம் அமைப்பு, நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் உருவானவேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வறிக்கை விவரம்:
மதிப்பீட்டு காலாண்டில், சென்னையில், புதிதாக, 8,000வேலை வாய்ப்புகள் உருவாகிஉள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த 2012-13ம் நிதியாண்டின் இதே காலாண்டில், 10,200 ஆக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஆக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மின் பற்றாக் குறை காரணமாக, சென்னையில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களின் மூலம், உருவாகும் புதியவேலை வாய்ப்புகள், 21 சதவீதம் அளவிற்கு குறைந்துபோயுள்ளன.
பணவீக்கம்:மின் பற்றாக்குறை மட்டுமின்றி, சர்வதேச பொருளாதார ”ணக்க நிலை, தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, பணவீக்க உயர்வுபோன்றவற்றாலும், 25 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மதிப்பீட்டு காலாண்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள் வாயிலாக, 41 சதவீதம், அதாவது, 3,700வேலை வாய்ப்புகள் உருவாகிஉள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 5,300 ஆக அதிகரித்து காணப்பட்டது.
இந்தியாவில்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்தசேவைகள், வன்பொருள் உருவாக்கம் ஆகிய துறைகளில், உலகத் தரமான தொழில்நுட்ப மையமாக சென்னை உருவெடுத்து உள்ளது. இருந்தபோதிலும், மதிப்பீட்டு காலத்தில்,மேற்கண்ட துறைகளில், 43 சதவீதவேலை வாய்ப்பை, சென்னை இழந்து உள்ளது.இதில், வன்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தசேவை துறைகளில், புதியவேலை வாய்ப்புகள், முறையே, 57 சதவீதம் மற்றும், 29 சதவீதம் குறைந்துள்ளன.
மோட்டார் வாகனம்:மதிப்பீட்டு காலத்தில், வங்கி மற்றும் நிதிசேவை துறைகள் மூலம், சென்னையில், 670பேருக்குவேலை வாய்ப்பு கிட்டியுள்ளது. எனினும், இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், உருவானவேலை வாய்ப்பை விட, சராசரியாக, 5 சதவீதம் குறைவாகும்.
மோட்டார் வாகன துறையிலும், புதியவேலை வாய்ப்புகள் உருவாவது, 37 சதவீதம் குறைந்து, 560 லிருந்து, 350 ஆக சரிவடைந்துள்ளன.இதேபோன்று தயாரிப்பு துறையிலும், புதியவேலை வாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கை, 41 சதவீதம் வீழ்ச்சி கண்டு,
460 லிருந்து, 270 ஆக குறைந்து உள்ளது.அதேசமயம், சென்னையில், தொலைத் தொடர்பு துறை நிறுவனங்களில், புதியவேலை வாய்ப்புகள், 149 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு, 160 என்ற எண்ணிக்கையில் இருந்து, 400 ஆக அதிகரித்துள்ளன.இதேபோன்று, காப்பீட்டு துறையிலும், புதியவேலை வாய்ப்புகள், 75 சதவீதம் அதிகரித்து, 240லிருந்து, 430 ஆக உயர்ந்து உள்ளன.
விளம்பரம்:கணக்கீட்டு காலாண்டில், கல்வி துறை மூலம் உருவான புதியவேலை வாய்ப்புகள், 17 சதவீதம் உயர்ந்து, 340 ஆக அதிகரித்துள்ளன.இதேபோன்று, மனித வளமேம்பாடு மற்றும் விளம்பர துறைகள் வாயிலாக, சென்னையில் உருவான புதியவேலை வாய்ப்பு முறையே, 10 சதவீதம் (170 ) மற்றும் 63 சதவீதம் (100) அதிகரித்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)