டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.168 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.168 குறைவு ...
நிலக்கரி இறக்குமதி 48 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
02:34

புதுடில்லி:நாட்டின் நிலக்கரி இறக்குமதி, சென்ற ஜூன் மாதத்தில், 48 சதவீதம் உயர்ந்து, 1.55 கோடி டன்னாக, அதிகரித் துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 1.05 கோடி டன்னாக குறைந்து காணப்பட்டது.அதானி எண்டர்பிரைசஸ், டாட்டா குழுமம், ஜே.எஸ்.டபிள்யூ குழுமம், செயில் ஆகிய நிறுவனங்கள், மேற்கண்ட நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளன.
மின் உற்பத்தி:22 துறைமுகங்கள் வழியாக இறக்குமதியான மொத்த நிலக்கரியில், சாதாரண மற்றும் அதிக சாம்பல் கொண்ட நிலக்கரி இறக்குமதி, முறையே, 1.27 கோடி டன் மற்றும், 28 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.இந்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், அவற்றின் நிலக்கரி தேவைக்காக, பொதுத்துறையை சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனம் ஒன்றையே சார்ந்துள்ளன.ஆனால், கோல் இந்தியா நிறுவனம், உள்நாட்டு நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அதன் உற்பத்தியை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளது.பொதுவாக, மின் உற்பத்தி நிறுவனங்கள், குறைந்தபட்சமாக, 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை, இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
தேவை:ஆனால், கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, நாட்டின், 17 மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்த நிலக்கரி, ஒரு வார தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு, குறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வில் மிகப் பெரிய அளவில், நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளும், அதானி குழுமம்,முந்த்ரா துறைமுகத்தை நிர் வகித்து வருகிறது.மதிப்பீட்டு காலத்தில், இத்துறைமுகம் வாயிலாக, இக்குழுமம், 24 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டது. இத்துடன், பரதீப்,கிருஷ்ணபட்டினம் மற்றும் கங்காவரம் துறைமுகங்கள் வழியாக, முறையே, 21.5 லட்சம் டன், 17 லட்சம் டன் மற்றும், 9.45 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியாகியுள்ளது.
இந்தோனேஷியா:இந்தோனேஷியாவில் இருந்து, இந்தியா, பெரும்பான்மை நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்கிறது. மதிப்பீட்டு காலத்தில், இந்தோனேஷியாவில் இருந்து, 1.15 கோடி டன் நிலக்கரி இறக்குமதியானது. ஆஸ்திரேலியாவில் இருந்து, 23 லட்சம் டன் மற்றும், தென்னாப்பிரிக்காவில் இருந்து, 8.09 லட்சம் டன் நிலக்கரி இறக்கு மதி செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கனடா, நியூசிலாந்து, மொசாம்பிக் ஆகிய நாடுகள், முறையே,1.93 லட்சம் டன், 54 ஆயிரம் டன் மற்றும், 47,300 டன் நிலக்கரியை, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)