பிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடைபிரான்சில் பென்ஸ் கார்களுக்கு தடை ... டாலருக்கு எதிரானரூபாய்மதிப்பு மேலும் சரிவு டாலருக்கு எதிரானரூபாய்மதிப்பு மேலும் சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்நிகர லாபம் 57 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
00:34

சென்னை:ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவுஅடைந்த முதல் காலாண்டில், 22.31 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 14.19 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம், 57.22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 33.02 சதவீதம் அதிகரித்து, 89.62 கோடியிலிருந்து, 119.21 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. மேலும், நிகர வட்டி வருவாய், 58.36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 26.80 கோடியிலிருந்து, 42.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலுமாக, இந்நிறுவனம் வழங்கிய கடன், 29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,747 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 2,897 கோடியாக இருந்தது. சென்ற ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, இந்நிறுவனத்தின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை, 80 ஆகவும், துணை மையங்களின் எண்ணிக்கை, 13 ஆகவும் உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)