பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:41
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற, இறக்கமாக காணப் படுகிறது. நேற்று முன்தினம் ரூபாய்மதிப்பு, 60.81 ஆக இருந்தது.
இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி சந்தையில், ரூபாய்மதிப்பு, முன்தினத்தை விட, 49 காசுகள் குறைந்து, முதன் முறையாக, 61.30ல் நிலை பெற்றது. இது, வர்த்தகத்தின் இடையே, 60.94-61.45 என்ற அளவில் காணப் பட்டது.
நேற்று முன்தினம் ரூபாய்மதிப்பு, வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில்,61.81 ஆக, இதுவரை காணாத அளவிற்கு சரிவடைந்து, பின்னர் ஏற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 10.30 சதவீதம் சரிவடைந்து உள்ளது. டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி கண்டதில், ஜப்பானின் யென், முதல்இடத்திலும், ரூபாய்இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|