இந்தியா - நைஜீரியா வர்த்தகம்1,660கோடி டாலரை எட்டியதுஇந்தியா - நைஜீரியா வர்த்தகம்1,660கோடி டாலரை எட்டியது ... கைவினை பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு கைவினை பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு ...
விமானசேவை நிறுவனங்களுக்கு ரூ.2,700கோடி வருவாய்இழப்பு:சுதந்திர தின சலுகைகள் வழங்கியதால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
03:55

புதுடில்லி:விமான கட்டண விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளால், இந்திய விமானச்சேவை நிறுவனங்களுக்கு, 2,400 - 2,700கோடி ரூபாய்வருவாய்இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நாட்டின் 67வது சுதந்திர தினத்தையொட்டி, பல விமானச்சேவை நிறுவனங்கள், இரு வார காலத்திற்கு, உள்நாட்டு பயணக் கட்டணங்களைபோட்டிபோட்டுக் கொண்டு குறைத்தன.மதிப்பீடு:இதனால், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், (ஜூலை - செப்.,), விமானச்சேவை நிறுவனங்களுக்கு, 2,700கோடி ரூபாய்வருவாய்இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஜூலையில், விமானச்சேவை நிறுவனங்களின் வருவாய் 18-20 சதவீதம் குறைந்து உள்ளது. இது, நடப்பு ஆகஸ்ட் மாதம்,மேலும், 5-8 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆகஸ்ட் துவக்கத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 7 லட்சம் விமான டிக்கெட்டுகளை, தலா, 1,777 ரூபா#க்கு, சலுகை கட்டணத்தில் வழங்குவதாக அறிவித்தது.ஏர்-இந்தியா நிறுவனமும், தள்ளுபடி விலையில், 2,000 ரூபா#க்கு விமான டிக்கெட்டுகளை விற்பனை செ#தன.இதேபோன்று, குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கி வரும் நிறுவனங்களும், சுதந்திர தினத்தையோட்டி, மூன்று நாட்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கின.இந்த சலுகைத் திட்டங்களுக்கு பயணிகளிடையே, நல்ல அளவில் வரவேற்பு கிடைத்ததாக, முன்னணி விமானச்சேவை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போட்டி:கோடை காலம் என்பதால், சென்றமே மாதம், விமான பயணிகளின் எண்ணிக்கை, 4.84 சதவீதமாக உயர்ந்திருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை, சென்ற ஜூன் மாதம், 1.84 சதவீதம் குறைந்து, 50 லட்சமாக சரிவுஅடைந்தது. இது, சென்ற 2012ம் ஆண்டு ஜூன் மாதம், 51 லட்சமாக உயர்ந்து இருந்தது.விமானச்சேவை நிறுவனங்களிடையேபோட்டி அதிகரித்து உள்ளதால், விமான கட்டணங்கள், நிலையாக இல்லை.இந்தபோக்கு, வரும் அக்டோபர் வரை தொடரும், அதன் பின் விமான பயணக் கட்டணங்கள், ஒரு நிலைக்கு வரும் என, ஆசிய பசிபிக் விமானபோக்குவரத்து மையம் (கப்பா), மதிப்பிட்டுள்ளது.
விமான பயணிகள் எண்ணிக்கை உயர்வு:நடப்பாண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், உள்நாட்டிற்குள் விமான பயணம்மேற்கொண்டோர் எண்ணிக்கை, 1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 358.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 354.53 லட்சமாக இருந்தது.எனினும், சென்ற ஜூலை மாதம், உள்நாட்டில் விமான பயணம்மேற்கொண்டோரின் எண்ணிக்கை, 48.66 லட்சமாக குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், 50.14 லட்சமாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை (45.37 லட்சம்) 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்ற ஜூலையில், ஜெட்ஏர்வேஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெட்லைட் நிறுவனங்கள் நீங்கலாக, அனைத்து விமான நிறுவனங்களின் சராசரி உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை, குறைந்துள்ளது.இந்திய விமானசேவை சந்தையில், மிகக் குறைந்த பயணக் கட்டணம் வசூலிக்கும், இண்டிகோவின் பங்களிப்பு, 29.7 சதவீதமாக உள்ளது. ஏர்-இந்தியா நிறுவனம், 19.7 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலுள்ளது.கோ ஏர் நிறுவனம், 8.3 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)