பதிவு செய்த நாள்
27 ஆக2013
09:59
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு உச்சநிலை சரிவாக ரூ.66-ஐ தாண்டியுள்ளது. வாரத்தின் முதல்நாளான நேற்று(ஆகஸ்ட் 27ம் தேதி) ரூ.1.10 காசுகள் சரிந்து ரூ.64.30 இருந்த ரூபாயின் மதிப்பு இன்று, தொடர்ந்து 2வது நாளும் சரிந்து கொண்டே செல்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.1.04 காசுகள் சரிந்து மீண்டும் ரூ.65-ஐ தாண்டி ரூ.65.34-ஆக இருந்தது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் மேலும் சரியத் தொடங்கியது. 01.55 மணியளவில் மீண்டும் ஒரு உச்சநிலை சரிவாக ரூ.66.06-ஆக சரிந்தது. பின்னர் மாலையில் மேலும் சரிந்து ரூ.66.24 எனும் நிலையில் முடிந்தது.
மாதத்தின் கடைசிவாரம் என்பதாலும், தொடர்ந்து இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு அமெரிக்க டாலர் தேவைப்படுவதாலும், உலகளவில் பிற நாட்டு கரன்சிகளும் மதிப்பு சரிந்து காணப்படுவதாலும் இந்த சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|