ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் ... ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.68-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.68-ஐ தொட்டது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நூல் விலை கிலோவுக்கு ரூ.16 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2013
10:23

திருப்பூர்: பஞ்சு விலை உயர்வு, மீண்டும் தலை தூக்கும் மின்வெட்டு, டீசல் விலை உயர்வால், திருப்பூர் பகுதி நூற்பாலைகள், நேற்று முதல் நூல் விலையை கிலோவுக்கு 16 ரூபாய் உயர்த்தியுள்ளன.

தமிழக நூற்பாலைகள், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து, நூல் உற்பத்தி செய்கின்றன. ஆண்டுதோறும், பருத்தி அறுவடை செய்யும், அக்., முதல் ஏப்., வரையிலான காலங்கள், பருத்தி பருவமாக கணக்கிடப்படுகிறது. கடந்த 2012-13ம் ஆண்டு, பருத்தி பருவம் துவங்கியது முதல், ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இதனால், சீசன் துவக்கம் முதலே, உள்நாட்டில் பஞ்சு விலை அதிகரிக்கத் துவங்கியது. மின்வெட்டு நேரமும் அதிகரித்ததால், நெருக்கடிக்கு உள்ளான நூற்பாலைகள், கடந்த பிப்., மாதம் முதல் கடந்த ஆக., மாதம் வரை, மாதந்தோறும் கிலோவுக்கு 5 ரூபாய் முதல் ஏழு ரூபாய் வீதம், படிப்படியாக உயர்த்திவந்தன. கடந்த ஏப்., மாதத்துடன் சீசன் நிறைவடைந்து, வெளிமாநில பஞ்சு வரத்து தடைபட்டுள்ளது. இதனால், கடந்த ஜூலை முதல் அசுர வேகத்தில் பயணித்த பஞ்சு விலை, தற்போது கேண்டி 52,000 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டும் தலைதூக்கியுள்ளது; டீசலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், நூல் உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதாக கூறி, திருப்பூர் நூற்பாலைகள், நேற்று நூல் விலையை கிலோவுக்கு 16 ரூபாய் உயர்த்தியுள்ளன.

கார்டடு (ஜி.எல்., ரகம்): 196.90 ரூபாயாக இருந்த 16ம் நம்பர் நூல், 212.77 ரூபாய்; 199.01 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 241.89; 207.48 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 223.36; 220.18 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 236.06; 233.94 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 249.82; 241.35 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 257.22 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கோம்டு (வி.எல்., ரகம்): 205.36 ரூபாயாக இருந்த 10ம் நம்பர், 221.24 ரூபாய்; 209.60 ரூபாயாக இருந்த 16ம் நம்பர் 225.47; 212.77 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 228.65; 221.24 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 237.12; 232.88 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 248.76; 247.70 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 263.58; 250.87 ரூபாயாக இருந்த 36ம் நம்பர், 266.75; 255.11 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 270.98 ரூபாய்.

சூப்பர் கோம்டு (ஆர்.எல்., ரகம்) 219.12 ரூபாயாக இருந்த 20ம் நம்பர், 235.00 ரூபாய்; 227.59 ரூபாயாக இருந்த 25ம் நம்பர், 243.47; 239.23 ரூபாயாக இருந்த 30ம் நம்பர், 255.11; 254.05 ரூபாயாக இருந்த 34ம் நம்பர், 269.93 ரூபாய்; 261.46 ரூபாயாக இருந்த 40ம் நம்பர், 277.33 ரூபாய்; 311.20 ரூபாயாக இருந்த 50ம் நம்பர், 327.08 ரூபாயாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கிலோவுக்கு ஐந்து ரூபாய் மட்டும் உயரும் நூல் விலை, தற்போது, 16 ரூபாய் உயர்ந்துள்ளது, பின்னலாடை தொழில் துறையினரை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)