பதிவு செய்த நாள்
05 செப்2013
00:46
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 352 ரூபாய் குறைந்து, 22,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதனால், இதன் விலை, ஒரு நாள் உயர்வதும், மறு நாள் குறைவதுமாக உள்ளது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,865 ரூபாய்க்கும், 1 சவரன், 22,920 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 30,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 44 ரூபாய் குறைந்து, 2,821 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 352 ரூபாய் சரிவடைந்து, 22,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 465 ரூபாய் குறைந்து, 30,175 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 61.60 ரூபாய்க்கும், 1 கிலோ பார் வெள்ளி, 57,570 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|