பதிவு செய்த நாள்
09 செப்2013
00:40

மும்பை:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக கடன் மற்றும் அன்னியச் செலாவணியில் மாற்றிக் கொள்ளக்கூடிய கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 371 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன.இது, கடந்த ஜூன் மாதத்தில், 195 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி திரட்டக்கூடிய திட்டத்தின் கீழ், 72 நிறுவனங்கள், 139 கோடி டாலரை திரட்டி கொண்டு உள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கூடிய திட்டத்தின் கீழ், 10 இந்திய நிறுவனங்கள், 232 கோடி டாலரை திரட்டியுள்ளன. கணக்கீட்டு மாதத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மேற்கண்ட இரு வழிமுறைகளில் முறையே, 200 கோடி டாலர் மற்றும் 15 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளது.
இது தவிர, டில்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட், 10.80 கோடி டாலரையும், டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ், 1 கோடி டாலரையும் திரட்டி கொண்டு உள்ளன.மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (50 கோடி டாலர்), டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் (15 கோடி டாலர்), என்.டி.பி.சி., (12.43 கோடி டாலர்), அல்ட்ரா டெக் சிமென்ட் (5 கோடி டாலர்), கிண்டில் இன்ஜினியரிங் (4.80 கோடி டாலர்), ஆகிய நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிநாட்டு வர்த்தக கடனை திரட்டி கொண்டு உள்ளன என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|