பதிவு செய்த நாள்
08 செப்2013
01:32

மும்பை:இந்தியாவின் அன்னியச்செலாவணி கையிருப்பு, சென்ற ஆகஸ்ட் மாதம், 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 223 @காடி டாலர் (13,380 கோடி ரூபாய்) சரிவடைந்து, 27,549 கோடி டாலராக (16.53 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டு உள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 108 கோடி டாலர் (6,480 கோடி ரூபாய்) சரிவுஅடைந்து, 27,772 கோடி டாலராக இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டு வருகிறது.
மதிப்பீட்டு வாரத்தில் அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 308 @காடி டாலர் குறைந்து, 24,740 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 97.71 கோடி டாலர் உயர்ந்து, 2,172 @காடி டாலராக அதிகரித்து உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1.49 கோடி டாலர் குறைந்து, 437 கோடி டாலராகவும், சர்வதேசநிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 11.25 கோடி டாலர் சரிவடைந்து, 199 கோடி டாலராகவும் குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென், ஸ்டெர்லிங் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கணக்கீட்டு வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|