பதிவு செய்த நாள்
09 செப்2013
00:43

புதுடில்லி:இந்தியாவில், ஆப்பிள் உற்பத்தி, ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. ஆப்பிள் விளையும் பகுதிகளில், பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வெப்பம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், அதன் உற்பத்தி சரிவடைந்து வருகிறது.இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த, 2006 - 07ம் நிதியாண்டில், நாட்டின் ஆப்பிள் உற்பத்தி, 16.24 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2007 - 08, 2008 - 09 மற்றும் 2009 - 10ம் நிதியாண்டுகளில், முறையே, 20 லட்சம் டன், 19.85 லட்சம் டன், 17.77 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.
இந்நிலையில், கடந்த, 2010 - 11ம் நிதியாண்டில், நாட்டின் ஆப்பிள் உற்பத்தி, 28.90 லட்சம் டன்னாக உயர்ந்தது.எனினும், 2011 - 12ம் நிதியாண்டில், ஆப்பிள் உற்பத்தி, 22.03 லட்சம் டன் என்ற அளவில், சரிவடைந்தது. சென்ற, 2012 - 13ம் நிதியாண்டின், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, நாட்டின் ஆப்பிள் உற்பத்தி, 18.59 லட்சம் டன் என்ற அளவில் மேலும் குறைந்துள்ளது.குளுமையான காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தட்ப வெப்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|