பதிவு செய்த நாள்
09 செப்2013
00:58

மும்பை:தரம் குறைந்த வாகன உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு, தடை விதிப்பது குறித்து, மத்திய அரசுதீவிரமாக பரிசீலித்து வருகிறது.சீனாவில் இருந்து மிகக் குறைந்த விலையில், வாகன உதிரிபாகங்கள் இறக்குமதியாகி வருகின்றன. இதனால், உள்நாட்டில், இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.சீனாவின் மலிவு விலை வாகன உதிரிபாகங்களுடன், போட்டி போட முடியாத நிலையில் இந்திய நிறுவனங்கள் உள்ளன.துறைமுகங்கள்:எல்லையோர துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வாயிலாக இறக்குமதியாகும் வாகன உதிரிபாகங்களின் தரம் குறித்த சோதனை, போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தரமற்ற மலிவு விலை வாகன உதிரிபாகங்கள், சந்தையில் குவிந்து வருவதால், உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, அவற்றை பயன்படுத்துவோரும் பாதுகாப்பு குறைபாடுகளால், பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இதை தடுக்கும் வகையில், இறக்குமதியாகும் வாகன உதிரிபாகங்களின் தரம் குறித்து, ”ங்கத் துறை, கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதையடுத்து, ”ங்கத் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வர்த்தகத் துறை செயலர் எஸ்.ஆர். ராவ், வருவாய் துறை செயலர் ”மித்போ”க்கு கடிதம் எழுத உள்ளதாக, வர்த்தக துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய அரசுஎடுக்க உள்ள நடவடிக்கை மூலம், சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளின் தரமற்ற, மலிவான வாகன உதிரிபாகங்களின் இறக்குமதி குறையும். மேலும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தவும், இத்தகைய நடவடிக்கை துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடத்தல்:இந்திய வாகன உதிரிபாகங்கள் துறை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், இவ்வளர்ச்சிக்கு தடைக்கல்லாக, சீனா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளின் தயாரிப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்நாடுகளில் இருந்து, இன்ஜின், கியர் பாக்ஸ் போன்றவை அதிக அளவில் இந்தியாவிற்கு வருகின்றன.
இவை, சீனாவில் இருந்து சட்டபூர்வமாக மட்டுமின்றி, தாய்லாந்து போன்ற நாடுகள் வழியாகவும் கடத்தி வரப்படுகின்றன.கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்திய வாகன உதிரிபாகங்கள் துறை, 4,000 கோடி டாலர் என்ற அளவிற்கு வர்த்தகம் புரிந்துள்ளது. இதே காலத்தில், 1,310 கோடி டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள், இறக்குமதியாகி உள்ளன. இதில், 60 சதவீதம் ஆசிய நாடுகளில் இருந்து வந்தவை என, இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|