பதிவு செய்த நாள்
26 செப்2013
00:50
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 22,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை சரிவடைந்ததை அடுத்து, கடந்த, இரு தினங்களாக குறைந்திருந்த இதன் விலை, நேற்று, சற்று உயர்ந்தது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,776 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,208 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10ரூபாய் உயர்ந்து, 2,786 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 22,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம்,100 ரூபாய் உயர்ந்து, 29,795 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|