தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுவாரஸ்ய தகவல்கள்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
17:51

* 1902ம் ஆண்டுதான் கார்களின் வேகத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான கார்கள் வெறும் மணிக்கு 45 மைல் என்ற வேகத்தில்தான் பயணித்தன. ஆனால் இன்று?
* 1927ம் ஆண்டுதான் முதல் எலக்ட்ரிக் போக்குவரத்து சிக்னல் விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப் பட்டது வோல்வர் ஹேம்ப்டன் நகரத்தில்
* 1985ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதியன்று போர்ட் எஸ்கார்ட் வாகனத்தில் உள்ள என்ஜினை முழுவதுமாக அகற்றி மீண்டும் புதிய என்ஜினை பொருத்தும் செயலை வெறும் 42 நொடிக்குள் செய்து முடித்தனர். இதுதான் உலகிலேயே என்ஜின் மாற்ற எடுத்துக்கொண்ட குறைந்தபட்ச நேரமாகும்.
* குதிரை பூட்டிய ஜட்கா வண்டியில், வண்டியின் முன்புறம் வண்டி ஓடும் போது தெறிக்கும். புழுதி ஓட்டுனர் மேல் படாத வண்ணம் வைக்கப்பட்டிருக்கும் பலகையின் பேர்தான் டாஷ்போர்ட். இதே பெயரைத்தான் காரில் ஓட்டுனர் முன்னிருக்கும் பகுதியை குறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
* 1769ம் ஆண்டுதான் முதல் வாகன விபத்து நடந்தது. அந்த விபத்தில் சேதமடைந்த வாகனத்தை பாரீசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காண முடிகிறது.
* உலகின் மிகச்சிறிய உயரம் கொண்ட சாலையில் சட்டபூர்வமாக ஓடக்கூடிய காரின் உயரம் வெறும் 19 அங்குலம்தான். ப்ளாட் மொபைல் என்றழைக்கப்படும் இந்த காரை பெர்ரி வாட்கின்ஸ் என்பவர் உருவாக்கினார். ரோல்ஸ் ராய்ஸ் காரின் லோகோவான ஸ்பிரிட் ஆப் எக்ஸ்டஸியில் வைரம் பதிக்கப்பட்டு வெளிவந்த சிறப்பு எடிஷனை 2 லட்சம் டாலர் விலைக்கு கேட்கப்பட்டது.
* உலகின் முதல் மிக விலையுயர்ந்த காராக கருதப்படுவது 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புகாட்டி ராயல் கெல்னர் கூப்வே ஆகும். இதன் விலை 8.7 மில்லியன் டாலர்
* அல்பேனியா நாட்டில் பதிவு செய்யப்படும் கார்களில் 80 சதவிகிதம் மெர்சிடெஸ் பென்ஸ் என்று ஒரு தகவல் கூறுகிறது.
* உலகிலேயே அதிக அளவு மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்தப்படும் பொருள் ஆட்டோமொபைல்தான்.
* அமெரிக்காவின் முதலில் விற்பனையான கார் கர்வ்ட்டேஷ் ஓல்ட்ஸ்மொபைல் 650 டாலருக்கு விற்கப்பட்டது.
* உலகிலேயே பார்க் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கும் நகரம் லண்டனாகும்.
* முதல் முதல் கார்களில் ஸ்டியரிங் வீலிற்கு பதில் லீவர் தான் கொடுக்கப்பட்டிருந்தது.
* வின்ட் ஷீல்ட் வைப்பரை கண்டுபிடித்தவர் மேரி ஆண்டர்சன் என்ற பெண்மணியாவார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
* காரின் ஏர்பேக் 40 மில்லிநொடிக்குள் விரிந்து விடுகிறது.
* ஸ்மார்ட் பார் மினி கார் 2690 மி.மி. நீளமும் 1560 மிமி அகலமும் கொண்ட நேனோவைவிட சிறிய கார் ஆகும். இதில் 19 பாகிஸ்தானிய பெண்கள் ஏறி அமர்ந்து சாதனை படைத்தனர். இது இரண்டு இருக்கை கொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது
* மனிதர்களை விட 3 மடங்கு அதிக எண்ணிக்கையில் கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2012ம் ஆண்டில் மட்டும் 60 மில்லியன் கார்கள் தயாரிக்கப்பட்டன.
* உலகின் மிகப்பெரிய ட்ராபிக் ஜாம் 2010ம் ஆண்டு பீஜிங்கில் ஏற்பட்டதுதான். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரத்திற்கு 12 நாட்கள் வாகனங்கள் தேங்கியிருந்ததாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)