தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டிவிஎஸ் ஜூபிட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
17:55

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நீண்டகாலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டர் அதிக சக்தி, உயர்ந்த இழுக்கும் விசை, சிறந்த எரிபொருள் திறன் கொடுக்கக்கூடிய இரைச்சல் இல்லாத, அனைத்தும் அலுமினியத்தினால் ஆன, குறைந்த உராய்வுத் தன்மை கொண்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்ப என்ஜின் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. எலக்ட்ரிக் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் கொண்டுள்ள ஜூபிட்டரின் 8 bhp பவரையும் 7500 ஆர்பிஎம்மிலும் 8 NM டார்க்கை 5500 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. மேலும் இதில் அதிக சக்தியை வழங்கும் "பவர் மோட்' மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் "இகோ மோட்' என்று எது தேவையோ அதற்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் 5 லிட்டர் எரிபொருள் தொட்டியில் வெளிப்புறத்திலிருந்து எரிபொருள் நிரப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும், நெடுஞ்சாலைப் பயணத்தை சங்கடமில்லாமல் வைக்கும் பாஸ்-பை ஸ்விட்ச், முன்பக்க டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சர்பர், பின்பக்க கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், ஃப்யூவல் இன்டிகேட்டர் போன்றவை சுகமான வசதியான பயணத்தை அளிக்கக் கூடியதாகும். ஜூபிட்டரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெபிள்லெஸ் ஸ்டீல் மஃப்லர் கார்ட் சுலபமாய் இயக்கக்கூடிய EZ நடு ஸ்டான்ட் போன்றவைகளும், கண்கவர் அழகிய நான்கு வண்ணங்களும் உரிமையாளர் பெருமிதம் கொள்ளக்கூடிய அம்சங்களாகும்.
சக்தி வாய்ந்த என்ஜின், அழகிய வடிவமைப்பு, அதிக வசதி, சிறந்த மைலேஜ் மற்றும் விலைக்கேற்ற மதிப்பு கொண்டதாக திகழ்கிறது டிவிஎஸ் ஜூபிட்டர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)