பதிவு செய்த நாள்
06 அக்2013
02:03

பெங்களூரு:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 7,000 கோடி டாலருக்கும் (௪.௨௦ லட்சம் கோடி ரூபாய்) குறைவாக, குறைக்க முடியும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெங்களூரில், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பல ஆய்வாளர்களும், தரக்குறியீட்டு நிறுவனங்களும், கடந்த நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறையை குறைக்க முடியாது என, சவால் விட்டு வந்தனர். ஆனால், கடந்த நிதியாண்டில், நாட்டின்மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 8,800 கோடி டாலராக (௫.௨௮ லட்சம் கோடி ரூபாய்) நிலை நிறுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த இலக்கும் எட்டப்படட்டது.
அதே போன்று, நடப்பு நிதிஆண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 7,000 கோடி டாலராக குறைத்து, சந்தை ஆய்வாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிப்போம்.இந்திய மக்களின் சேமிப்பு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. மிக இடர்பாடான காலத்தில் கூட, பொதுமக்களின் சேமிப்பு, 30 சதவீதத்திற்கும் கீழ் குறையவில்லை. மக்களின் சேமிப்பை கொண்டு, பல்வேறு ஆக்கப்பூர்வமான முதலீடுகளை மேற்கொள்ள
முடியும்.தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலையை கடந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டை விட மேம்படும்.இது, எதிர்வரும் நிதியாண்டில், 6–7 சதவீதம் என்ற அளவிலும், அதற்கு அடுத்த நிதியாண்டில், 8 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது.நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியின் கவர்னர், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி கணக்கில், 5,600 கோடி டாலர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|