பதிவு செய்த நாள்
06 அக்2013
02:21

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற செப்டம்பர் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 112 கோடி டாலர் (6,720 கோடி ரூபாய்) குறைந்து, 27,626 கோடி டாலராக (16.57 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக அன்னியச் செலவாணி கையிருப்பு அதிகரித்து வந்தது.
குறிப்பாக, முந்தைய வாரத்தில், 203 கோடி டாலர் (12,180 கோடி ரூபாய்) அதிகரித்து, 27,738 கோடி டாலராக (16.64 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது.ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக வளர்ச்சி கண்டு வந்த நாட்டின் அன்னியச்செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 129 கோடி டாலர் குறைந்து, 24,792 கோடி டாலராக குறைந்துள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,172 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு 11 லட்சம் டாலர் அதிகரித்து, 443 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு, 17.77 கோடி டாலர் வளர்ச்சி கண்டு, 219 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|