பதிவு செய்த நாள்
09 அக்2013
00:34

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, ஒருவழியாக கட்டுக்குள் வரத் துவங்கியுள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.80 ஆக இருந்தது. இது, நேற்று, 1 காசு சரிவடைந்து, 61.81ல் நிலை பெற்றது.
நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 9 காசுகள் அதிகரித்து, 61.71ஆக இருந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 61.61 வரையிலும், குறைந்தபட்சமாக, 61.87 வரையிலும் சென்றது.நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி, வங்கிகள் வாங்கும் அன்றாடக் கடனுக்கான வட்டியை, 9.5 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதமாக குறைத்தது.
மேலும், வரும் 11ம் தேதி முதல், வெள்ளி தோறும், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், 7 நாட்கள் மற்றும் 14 நாட்களுக்கான கடனை வங்கிகள் பெறலாம் என, அறிவித்தது.இத்தகைய நடவடிக்கைகளால் வங்கிச் சந்தையில் நிதிப்புழக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், நேற்று பங்குச் சந்தை எழுச்சி கண்டது.இதன் தாக்கம் காரணமாக, அமெரிக்க நிதிச் சிக்கலுக்கு
இடையிலும், ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|