பதிவு செய்த நாள்
09 அக்2013
00:39

புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய், 11.41 சதவீதம் உயர்ந்து, 65,355 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, தற்காலிக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 58,662 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய், 9.67 சதவீதம் உயர்ந்து, 40,294 கோடியில் இருந்து, 44,192 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.ரயில் பயணிகள் மூலம் ஈட்டிய வருவாய், 16.16 சதவீதம் உயர்ந்து, 15,582 கோடியில் இருந்து, 18,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதர ரயில் பெட்டிகள் வாயிலான வருவாய், 22.48 சதவீதம் உயர்ந்து, 1,511 கோடியில் இருந்து, 1,850 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 426 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் பயணம் செய்தவர்களை (427 கோடி) விட, 0.29 சதவீதம் குறைவாகும்.
இதே காலத்தில், புறநகரங்களில் ரயில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 2.85 சதவீதம் உயர்ந்து, 221 கோடியில் இருந்து, 227 கோடியாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், இதே காலத்தில், புறநகர் சாராத பகுதிகளில், ரயில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 3.68 சதவீதம் குறைந்து, 206 கோடியில் இருந்து, 198 கோடியாக குறைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|