பதிவு செய்த நாள்
10 அக்2013
01:34

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று காலையில் வர்த்தகம் துவங்கிய போது, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த, 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என்ற செய்தியால், மதியத்திற்கு பின் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இதையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' ஆகியவை தலா, 1.33 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், மருந்து உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு
தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 265.65 புள்ளிகள் அதிகரித்து, 20,249.26 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,277.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,826.96 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ் உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், மகிந்திரா, சிப்லா, மாருதி உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டுஎண், 79.05 புள்ளிகள் உயர்ந்து, 6,007.45 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக,6,015 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,877 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|