நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8.64 லட்சம் டன்நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8.64 லட்சம் டன் ... தங்கம் விலை ரூ.232 உயர்வு தங்கம் விலை ரூ.232 உயர்வு ...
பரஸ்பர நிதி நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு :நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
02:32

இந்தியாவில் செயல்படும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் வருவாயும், நிகர லாபமும், கடந்த 2012-13ம் நிதியாண்டில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.வருவாய்சர்வதேச பொருளாதார சுணக்க நிலை மற்றும் உள்நாட்டில் பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக் கிடையில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் வருவாய் கடந்த, 2012-13ம் நிதியாண்டில், 5,134 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 860 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளது.
இவை, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில் முறையே, 4,792 கோடி ரூபாய் மற்றும் 764 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன. உள்நாட்டில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள், பிராங்ளின் டெம்பிள்டன் மற்றும் குவாண்டம் ஆகிய இரு பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடந்த நிதியாண்டிற்கான செயல்பாடுகள் குறித்த நிதி நிலை அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
கடந்த நிதியாண்டில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஈட்டியுள்ள லாபம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். அதேபோன்று, இந்நிறுவனங்களின் வருவாய், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என, பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறித்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணை தலைமை அதிகாரி, வி.ரமேஷ் கூறியதாவது:இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியை, சிறந்த முறையில் நிர்வகித்து, சிறப்பான அளவில் வருவாய் மற்றும் லாபத்தை ஈட்டியுள்ளன.
கணக்கீட்டு நிதியாண்டில், இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து, செலவினங்கள் அதிகரித்திருந்த நிலையிலும், இந்நிறுவனங்களின் வருவாயும், நிகர லாபமும் நன்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடன்பத்திரங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, முதலீட்டாளர்களிடமிருந்து, நிதியை திரட்டி, அத்தொகையை, நிறுவனங்களின் பங்குகள், கடன்பத்திரங்கள், நிதி சந்தை போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.பங்குச் சந்தை நன்கு இல்லாததால், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களிலிருந்து, பல முதலீட்டாளர்கள் வெளியேறினர்.
இது போன்ற திட்டங்களை நிர்வகித்து வந்த, பரஸ்பர நிதி நிறுவனங்களின் தொகுப்பு எண்ணிக்கை சரிவடைந்தது. அதேசமயம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும், 'பேலன்ஸ்டு பண்டு' திட்டங்களில் முதலீடு செய்தோர் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கும் அதிக வருவாயும் கிடைத்துள்ளது.
அதேசமயம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவினாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தாலும், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு சரிவடைந்தது. சென்ற நிதியாண்டில், எச்.டீ.எப்.சி. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் வருவாய், 784 கோடி ரூபாயாகவும், இதன் நிகர லாபம், 319 கோடி ரூபாயாகவும் இருந்தன.
இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில் முறையே, 690 கோடி மற்றும் 269 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.இதையடுத்து, சென்ற
நிதியாண்டில், இந்நிறுவனம் நிகர லாப அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ளது.ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டுகடந்த 2010-11 மற்றும் 2011-12ம் ஆகிய நிதியாண்டுகளில், நிகர லாப அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நிகர லாபம் (திருத்தி அமைக்கப்பட்ட புள்ளிவிவரம்), சென்ற நிதியாண்டில், முந்தைய நிதியாண்டை விட, 28.5 சதவீதம் சரிவடைந்து, அதாவது, 276 கோடி ரூபாயிலிருந்து, 198 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஒரே மாதத்தில்...சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு. 8.66 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 7.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, கணக்கீட்டு மாதத்தில், இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 16,2013
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)